Sunday, July 8, 2018

மேலப்பாளையம் டவுண் செல்லும் பாதையில் விபத்துக்களை தடுக்க தடுப்புகளை அமைத்த பசுமை மேலப்பாளையம் குழுவினர்

மேலப்பாளையம் டவுண் செல்லும் பாதையில் விபத்துக்களை தடுக்க
தடுப்புகளை அமைத்த பசுமை மேலப்பாளையம் குழுவினர்

08/07/2018
மேலப்பாளையத்திலிருந்து டவுண் செல்லும் பாதையில் அமைந்துள்ள பாளையங்கால்வாயில் புதிதாக பாலம் அமைக்கும் பணிக்காக பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது, இந்நிலையில் பாளையங்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து பாலத்தின் பணிகள் நிறுத்தப்பட்டது, வாகனங்கள் செல்வதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதையானது எவ்வித பாதுகாப்பு மின்றி மிக அலட்சியமாக அதிகாரிகளால் கண்டுகொள்ளாமல் இருந்துவந்த நிலையில் தற்காலிக சாலையில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையானது, இதை கருத்தில் கொண்டு SDPI கட்சியின் பசுமை மேலப்பாளையம் குழுவினர் நேற்று 07/07/2018 இரவு கால்வாயின் இருபுறங்களிலும் கம்புகளை நட்டி அதன் மீது எச்சரிக்கை ரிப்பனை கட்டிவிட்டனர், மேலும்  இரவு நேரங்களில் கும்மிருட்டில் பெரும் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகளின் கவலை போக்கும் விதமாக உடணடியாக மாநகராட்சி நிர்வாகம் கால்வாயின் இருபுறமும் மின்விளக்கு வசதிகளை போர்கால அடிப்படையில் ஏற்படுத்திதர இதன் மூலமாக கோரிக்கையும் வைத்தனர்,

இதில் SDPI கட்சியின் 38 வது வார்டு நிர்வாகிகளான புகாரி, அல்தாஃப், நைனாம் பள்ளி மோதீன், பசுமை மேலப்பாளையம் தலைவர் சலீம், செயளாலர் முகம்மது லெப்பை மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Monday, October 23, 2017

#கன்னிமார்குளம் #பாளையங்கால்வாய் #நிலத்தடிநீர் #சுத்தம் #சுகாதாரம்

பாதுகாத்திட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம்
பசுமை மேலப்பாளையம் திட்டம் சார்பாக புகார் மனு

23/10/2017

பெறுநர்:
உயர் திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருநெல்வேலி,

பொருள்: மேலப்பாளையம் மக்களின் நிலத்தடி நீர் ஆதாரத்தினை பாதுகாக்க  ஆவண செய்ய வேண்டி!

உயர் திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,  
எங்களது மேலப்பாளையம் மண்டலம் நெல்லை மாநகராட்சியின் இதயப்பகுதி ஆகும். தற்போது மிக மோசமான சுகாதாரக்கேடுகளால் இயற்கை அன்னை வழங்கிய பொலிவை இழந்து நிற்கிறது.

எனவே இந்நிலையை மாற்ற தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்து இருக்கிறோம். அதனை தாங்கள் தயவுகூர்ந்து நிறைவேற்றி தர வேண்டி கீழ் கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம். 

கோரிக்கைகள்:

1.நெல்லை மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டலத்தில் மக்கள் தொகை கணக்கிற்கு ஏற்ப சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சுகாதார பணிகளை மேம்படுத்தவும், கழிவுநீர் ஓடைகளை தூர்வாரி மூடியிடப்பட்ட கழிவுநீர் ஓடைகளாக மாற்றித்தரவும் தாங்கள் ஆவண செய்ய வேண்டுகின்றோம்.

2. மேலப்பாளையத்தின் விரிவாக்க பகுதிகளான ஃபாத்திமா நகர்1&2, பூங்கா நகர், புதுக்காலணி NSR காலணி(பிறை நகர்) போன்ற பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்துதர தாங்கள் ஆவண செய்ய வேண்டுகின்றோம்.

3. இப்பகுதியில் பன்னெடுங்காலமாக நிலத்தடி நீரை சேமித்து வைப்பதில் முக்கிய காரணியாக பாளையங்கால்வாய் விளங்கிவந்தது. ஆனால் சுமார் 2.50 லட்சம் மக்கள் வாழும் மேலப்பாளையம் மண்டலத்திலிருந்து தற்போது வெளியேறும் மொத்த கழிவுநீரும் பாளையங்கால்வாயில் அனுதினமும் கலந்து வருவதால் பாதாள சாக்கடை திட்டம் மூலமாக வெளியேற்றுவது என்ற திட்டமானது கிட்டத்தட்ட தோல்வியடைந்த திட்டமாகிவிட்டது. இதனால் மண்டலத்தின் அனேக கழிவு நீர்களும் மண்டலத்தின் வீதிகளில் பொங்கி வழிவதோடு பாளையங்கால்வாயில் கலந்து கால்வாயும் மாசுபட்டு மண்டலம் சுகாதார சீர்கேடு அடைவதற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. மண்டலத்தின் மொத்த கழிவுநீரும் பாளையங்கால்வாயில் கலப்பதால் மாசுபட்டு அது சாக்கடையாக மாறியுள்ளது. எனவே நீர் வரட்சியை தவிர்க்க பாளையங்கால்வாயை தூர்வாரி அதன் கரைகளில் சிமெண்ட் சுவர்கள் அமைத்து கழிவுநீர் கலக்காதவன்னம் தடுத்து அதனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை தாங்கள் ஆவன செய்ய வேண்டுகின்றோம்.
.

4. மேலப்பாளையத்தில் அமைந்துள்ள கலிமா குளம் என்ற கன்னிமார் குளம் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததாலும் மேலப்பாளையம் விரிவாக்க பகுதிகளான ஹாமீம்புரம் 12 தெருக்கள், பாத்திமா நகர் I, II, சித்தீக் நகர், பூங்கா நகர், புதுக்காலனி, ஹாஜிரா நகர், பீடி காலனி மற்றும் பல தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக குளத்தில் கலப்பதாலும் மேற்கண்ட குளமானது சாக்கடைக் கழிவுகளால் நிரம்பி மாசுபட்டு, குளமானது அதன் நீர் தேக்க கொள்ளளவில் இருந்து மிகவும் குறைந்து வருகிறது. இதனால் மேலப்பாளையத்தின் நிலத்தடி நீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்த குளத்தை சீர்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் கரைகளை திடப்படுத்தி, அதனுள் கலக்கும் கழிவுநீரோடைகளை தடுத்து, சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் மேலப்பாளையம் மக்களின் வசிப்பிட பரப்பளவு என்பது பெருநகரங்களுக்கு இணையாக மிகவும் நெருக்கமாக வசித்து வருகின்றனர். ஆனால் இம்மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இப்பகுதியில் இல்லாத காரணத்தால் மேற்கண்ட கன்னிமார்குளத்தை பாதுகாக்கும் விதமாக குளத்தை தூர்வாரி, குளத்தின் கரையோரத்தில் சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை அமைத்து தர வேண்டுகின்றோம்.

.  

ஆகவே உயர் திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்தப்படுத்துவதன் மூலம் மேலப்பாளையம் மண்டலத்தை ஒரு சுத்தமான, சுகாதாரமான, அடிப்படைக்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்ட மண்டலமாக முன்னேற்றுவதற்கு ஆவண செய்ய வேண்டுமெனெ “பசுமை மேலப்பாளையம் திட்டத்தின்” சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருவேல மர அழிப்பு நடவடிக்கையாக எங்களது பசுமை மேலப்பாளையம் திட்டம் குழுவினரின் சொந்த முயற்சியால் சுமார் ஐம்பது ஏக்கர் நில பரப்பளவில் பரவி, குளத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்த கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்தோம், மேலும் கன்னிமார் குளத்தையும் பாளையங்கால்வாயையும் தூர்வாரிட பல்வேறு மனுக்களை கொடுத்தும் வருகின்றோம், பாளையங்கால்வாய் மற்றும் கன்னிமார் குளத்தை தூர்வாரிட எங்கள் குழுவினர் தயாரக உள்ளோம், எனவே தாங்கள் வருகின்ற கோடைகாலத்தில் தூர்வாரும் அந்த உயரிய பணியில் எங்களை இணைத்தோ, பாளை சட்டமன்ற உறுப்பினருடன் இணைந்து அல்லது தனியாகவோ செயல்பட எங்களுக்கு அனுமதி தந்து வழிகாட்டிட வேண்டிகின்றோம்.

மனு கொடுக்கும் போது SDPI கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட துணைத்தலைவரும் பாளை சட்டமன்ற தொகுதி பொறுப்பு தலைவருமான ஷாகுல் ஹமீது உஸ்மானி, பசுமை மேலப்பாளையம் திட்டக்குழுவின் தலைவர் Y.சலீம், பசுமை மேலப்பாளையம் ஒருங்கிணைப்பாளர் சலீம்தீன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட துணைத்தலைவர் யூசுஃப் ரஹ்மான் மற்றும் SDPI கட்சியின் சுற்றுப்புறச் சூழல் மாவட்ட செயலாளர் ஏர்வாடி ஷேக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

நாள்: 23.10.2017                 
 
இடம்: திருநெல்வேலி

Y. சலீம்
தலைவர்,
பசுமை மேலப்பாளையம் திட்டம் மேலப்பாளையம்

Sunday, September 3, 2017

*மார்க்க கல்வியை நிலைப்படுத்துவோம்*

*பட்டமளிப்பு விழா - அழைப்பு*

*நமது மேலப்பாளையம் இர்பானுல் ஹுதா மகளிர் அரபி கல்லூரி 5 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் 04/09/2017 திங்கள் கிழமை இரவு 7 மணி அளவில் பஜார் திடலில் நடைபெறுகிறது*

பல்வேறு மார்க்க அறிஞர்கள் உரை நிகழ்த்துகின்றனர்

*அனைவரும் வருக
இறையருள் பெறுக*

K.s சாகுல் ஹமீது உஸ்மானி - தலைவர்
இர்பானுல் ஹுதா மகளிர் ஷரியத் கல்லூரி
அத்தியடி மேலத்தெரு- மேலப்பாளையம்
9944281881

https://m.facebook.com/story.php?story_fbid=530743333934185&id=436494610025725

Tuesday, August 29, 2017

#பாளையங்கோட்டை கோட்டூர் மாணவி ஷஃப்ரின் ஹாஜிரா மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியை இலக்கியா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், சமீப காலமாக தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெற்று வரும் (மக்கள்) விரோத நடவடிக்கைகளில் அரசு தனி கவனம் செலுத்த வலியுறுத்தியும், பாளையங் கோட்டூர் ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து இயக்கங்கள், கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 29-08-2017 மாலை 5:00 மணியளவில் பாளை ஜவஹர் திடலில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாளையங் கோட்டூர் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தலைமை ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில்  SDPI கட்சியின் அம்பை தொகுதி தலைவர் பீர்மஸ்தான், கோட்டூர் M.ரத்தீஸ், SDTU நெல்லை மாவட்ட செயலாளர் முஹம்மது அலி,  தமுமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஐ.உஸ்மான் கான், MMMK மாவட்ட செயலாளர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டூர் ஜமாத் பொருளாளர் W.அப்துல் நாசர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.

INTJ மாவட்ட செயலாளர் அவர்களும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் தூத்துக்குடி கண்ணன் அவர்களும், VCK மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் அவர்களும், TMMK மாநில செயலாளர் மைதீன் சேட் கான் அவர்களும், SDPI கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் K.S ஷாஹுல் ஹமீது அவர்களும், MMMK மாநில தலைவர் பாளை ரஃபீக் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் ம.ம.க தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பீர் அவர்கள் நன்றியுறையாற்றினார்.

இந்த மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் 300 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பள்ளி நிர்வாகத்திற்கு எதிரான தனது கண்டனங்களை அழுத்தமாக பதிவு செயதனர்.

Friday, June 2, 2017

வபாத் அறிவிப்பு

சிகிச்சை பலனின்றி மேலப்பாளையம் சகாபுத்தீன் வபாத்தானார்கள்

கடந்த வாரம் கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த அருமை சகோதரர் சகாபுத்தீன் அவர்களை இன்று 02/06/2017 அல்லாஹ் அழைத்து கொண்டான்

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜகூன்

எழுந்து நடந்திட உதவிடுவோம்

பதிவு நாள் 01/06/2017

கடந்த 27/05/2017 சனிக்கிழமை வெள்ளாங்குழி அருகே விபத்துக்குள்ளாகி காலில் படுகாயம் அடைந்து தற்போது அறுவை சிகிச்சை முடிந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மேலப்பாளையம் தாய் நகரை சார்ந்த ஏழ்மை நிலையில் உள்ள கோஜா சலாவுத்தீன் மகன் நவாஸ் பூரண குணம் அடைய உதவிடுவோம்

தற்போது வரை 50 ஆயிரம் செலவாகிஉள்ளது

இன்னும் தொடர்ந்து சிகிச்சை பெறும் சூழ்நிலையில் உள்ளார் . தற்போது பாளை அன்பு நகர்  மதுபாலா எலும்பு பிரிவு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

நீங்கள் உதவி செய்ய விரும்பினால்
தொடர்புக்கு நவாஸ் தந்தை செல் நம்பர்
9092377202

வங்கியில் பணம் அனுப்ப நவாஸ்ஸின் தாயார் வங்கி கணக்கு விபரம்
Ameerfathu
ac - 237201000016936
Branch- melapalayam code 2372
Bank - Indian overseas Bank
Melapalayam- Tirunelveli

Saturday, May 20, 2017

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மேலப்பாளயம் சிறுவனை காணவில்லை

இந்த படத்தில் இருக்கும் சிறுவன் பெயர் சுஹைல் வயது 12 இச்சிறுவனை இன்று (20/05/2017) மதியம் தன் தாய் தந்தையருடன் போத்தீஸ் (டவுண்) சென்றிருந்த போது காணவில்லை காணமல் போன சமயம் வெள்ளை நிற சட்டையும் நீள நிற ஜீன்ஸும் அணிந்திருந்தான் இச்சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தால் கீழ்கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளவும்.

ஆரிஃப் (தந்தை) +91 7418584708
ஹஸன் (மாமா)  +91 9840955471
அப்துல்லாஹ் (சித்தப்பா)  8110881603
update 10.17pm

உறுதி செய்யப்பட்ட தகவல் அதிகம் பகிரவும்

https://m.facebook.com/story.php?story_fbid=1911287482484931&substory_index=0&id=1406440819636269