Tuesday, August 29, 2017

#பாளையங்கோட்டை கோட்டூர் மாணவி ஷஃப்ரின் ஹாஜிரா மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியை இலக்கியா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், சமீப காலமாக தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெற்று வரும் (மக்கள்) விரோத நடவடிக்கைகளில் அரசு தனி கவனம் செலுத்த வலியுறுத்தியும், பாளையங் கோட்டூர் ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து இயக்கங்கள், கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 29-08-2017 மாலை 5:00 மணியளவில் பாளை ஜவஹர் திடலில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாளையங் கோட்டூர் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தலைமை ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில்  SDPI கட்சியின் அம்பை தொகுதி தலைவர் பீர்மஸ்தான், கோட்டூர் M.ரத்தீஸ், SDTU நெல்லை மாவட்ட செயலாளர் முஹம்மது அலி,  தமுமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஐ.உஸ்மான் கான், MMMK மாவட்ட செயலாளர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டூர் ஜமாத் பொருளாளர் W.அப்துல் நாசர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.

INTJ மாவட்ட செயலாளர் அவர்களும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் தூத்துக்குடி கண்ணன் அவர்களும், VCK மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் அவர்களும், TMMK மாநில செயலாளர் மைதீன் சேட் கான் அவர்களும், SDPI கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் K.S ஷாஹுல் ஹமீது அவர்களும், MMMK மாநில தலைவர் பாளை ரஃபீக் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் ம.ம.க தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பீர் அவர்கள் நன்றியுறையாற்றினார்.

இந்த மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் 300 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பள்ளி நிர்வாகத்திற்கு எதிரான தனது கண்டனங்களை அழுத்தமாக பதிவு செயதனர்.