Sunday, July 8, 2018

மேலப்பாளையம் டவுண் செல்லும் பாதையில் விபத்துக்களை தடுக்க தடுப்புகளை அமைத்த பசுமை மேலப்பாளையம் குழுவினர்

மேலப்பாளையம் டவுண் செல்லும் பாதையில் விபத்துக்களை தடுக்க
தடுப்புகளை அமைத்த பசுமை மேலப்பாளையம் குழுவினர்

08/07/2018
மேலப்பாளையத்திலிருந்து டவுண் செல்லும் பாதையில் அமைந்துள்ள பாளையங்கால்வாயில் புதிதாக பாலம் அமைக்கும் பணிக்காக பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது, இந்நிலையில் பாளையங்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து பாலத்தின் பணிகள் நிறுத்தப்பட்டது, வாகனங்கள் செல்வதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதையானது எவ்வித பாதுகாப்பு மின்றி மிக அலட்சியமாக அதிகாரிகளால் கண்டுகொள்ளாமல் இருந்துவந்த நிலையில் தற்காலிக சாலையில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையானது, இதை கருத்தில் கொண்டு SDPI கட்சியின் பசுமை மேலப்பாளையம் குழுவினர் நேற்று 07/07/2018 இரவு கால்வாயின் இருபுறங்களிலும் கம்புகளை நட்டி அதன் மீது எச்சரிக்கை ரிப்பனை கட்டிவிட்டனர், மேலும்  இரவு நேரங்களில் கும்மிருட்டில் பெரும் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகளின் கவலை போக்கும் விதமாக உடணடியாக மாநகராட்சி நிர்வாகம் கால்வாயின் இருபுறமும் மின்விளக்கு வசதிகளை போர்கால அடிப்படையில் ஏற்படுத்திதர இதன் மூலமாக கோரிக்கையும் வைத்தனர்,

இதில் SDPI கட்சியின் 38 வது வார்டு நிர்வாகிகளான புகாரி, அல்தாஃப், நைனாம் பள்ளி மோதீன், பசுமை மேலப்பாளையம் தலைவர் சலீம், செயளாலர் முகம்மது லெப்பை மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.