Tuesday, January 31, 2017

தமிழகத்தில் கலவரத்திற்கு வித்திடும் பாஜக?

தமிழகத்தில் கலவரத்திற்கு வித்திடும் பாஜக?

Tuesday, January 31st, 2017 1:58 PM     Wafiq Sha

தமிழகம் முழுவதும் ஜாதி மத பேதமின்றி ஜல்லிக்கட்டுவிற்காக மக்கள் ஒன்று திரண்டு போராட்டங்கள் நடத்தினர். போராட்டகாரகளுக்கு இஸ்லாமியர்கள் உணவு அடைக்கலம் வழங்குவதும் போராட்டத்தில்  ஈடுபட்டு வந்த இஸ்லாமியர்களுக்கு அவர்கள் தொழுகை நடத்த இந்து, கிறிஸ்தவ சமூகத்தினர் அரணாக நின்றதும் தமிழகத்தின் ஒற்றுமைக்கு மற்றொரு சான்றாகவே அமைந்தது. ஆனால் மத நல்லிணக்கத்தை எங்குமே விரும்பாத பாஜக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் தமிழகத்தில் ஏதாவது செய்து மத கலவரத்தை ஏற்படுத்திவிடலாம் என்று முயற்சித்தது.

பாஜக வின் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விக்னேஷ் வாசுதேவன் என்ற மாணவனை முஸ்லிம்கள் தாக்கியதாக ஒரு வதந்தியை பரப்பினார். இதனை இந்து சமூகத்தை சேர்ந்தவர்களே உடனுக்குடன் கண்டித்தனர். இதனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை.

அடுத்ததாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன வேலை என்று இஸ்லாமியர்களை குறிக்கும் விதமாக சர்ச்சையை கிளப்பினர். இதற்கும் பிற மதத்தினர் “மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்தவர்கள் இது போன்ற கருத்துக்களை கூற தகுதியற்றவர் என்பது போல பதிலளிக்க அதிலும் சங் பரிவார கும்பலுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.

இருந்தும் விடாமல் மெரினாவில் ஒசாமா பின் லேடனின் படத்தினை முஸ்லிம்கள் வைத்திருந்தார்கள் என்றும் அதற்கான புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும் மற்றொரு வதந்தியை அவர்கள் கிளப்பினார்கள். இது ஒரு படி மேலே போய் முதல்வரின் வாயாலேயே இந்த குற்றச்சாட்டு வெளியானது. ஆனால் அந்த புகைப்படம் மெரினாவில் எடுத்தது இல்லை என்றும் மேலும் அந்த வாகனத்தின் உரிமையாளர் ராஜி என்பவர் என்றும் அது முஸ்லிம் நபருடைய வாகனம் இல்லை என்று பின்னர் தெரிய வந்தது.

இவர்களின் இந்த அனைத்து முயற்ச்சிகளும் பொய்த்துப் போகவே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியது ஏன் என்று குற்றச்சாட்டு வைத்தனர். அதற்கும் தமிழக மக்கள் தகுந்த பதிலளித்து சங்க்பரிவார கும்பலின் வாயடைத்தனர்.

தமிழகம் முழுவதும் ஒருமித்த குரலோடு ஒற்றுமையாக கை கோர்த்து ஒரு பொதுப் பிரச்சனைக்காக மக்கள் போராடிவரும் வேலையில் இந்த சங் பரிவார கும்பல் மட்டும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயசித்து வந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனையினை இவர்கள் எழுப்பியுள்ளனர்.
திருப்பூரில் பாஜக மாவட்ட துணைத்தலைவர் முத்து என்பவர் சமீபத்தில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது உடல் அருகே தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டும் மோடியின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்தும் அங்கு TPR12345 எட்ன்று எழுதப்பட்டு அதில் 3 என்கிற எண் அடிக்கப்பட்டும் இருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவில் முத்து கொலை செய்யப்படவில்லை என்றும் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது உடலில் சிறியளவிலான காயங்கள் கூட இல்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்துவுக்கும் ஒரு பெண்ணிற்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும் இது அவர்களது வீட்டிற்கு தெரிந்ததால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க ஒரு தற்கொலையை கொலை என்று கூறி அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியது யார் என்பது தொடர்பான விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தற்கொலை செய்துகொண்ட ஒருவரது உடலின் அருகில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியும் அதனருகில் பாஜக கொடி மற்றும் காவிக் கோடி ஒன்று இவற்றுக்கு நடுவில் கறுப்புக் கொடியை வைத்தும் மோடியின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்தும் அப்பகுதியில் கலவரத்திற்கு வித்திட்டவர்கள் யார் என்பது தொடர்பான விசாரணையிலும் காவல்துறை இறங்கியுள்ளனர்.

காவல்துறையின் இந்த விசாரணை முடிவுகளை அடுத்து “முத்துவின் கொலையை கண்டித்து போராட்டம்” நடத்தப்போவதாக அறிவித்த பாஜக அதனை வாபஸ் பெற்றுள்ளது. இதே போன்று கோவையில் இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறி இந்து முஸ்லிம் கலவரம் ஏற்படுத்த சங்க்பரிவார கும்பல்கள் முனைந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/puthiyavidial/

No comments:

Post a Comment