Saturday, February 18, 2017
Friday, February 10, 2017
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த பாஜக கவுன்சிலரின் சகோதரர்
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த பாஜக கவுன்சிலரின் சகோதரர்
By Wafiq Sha onFebruary 10, 2017
இந்திய இராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்துவரும் 11 பேரை மத்திய பிரதேச தீவிரவாத தடுப்பு படை கைது செய்துள்ளது. இந்த 11 பேரில் தேசப்பற்றை தங்களுக்கே உற்றித்தாக்கிக் கொண்ட பாஜக கவுன்சிலரின் சகோதர் ஒருவரும் அடக்கம்.
தீவிரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் சீன தொழில்நுட்பங்களைக் கொண்டு தனியே ஒரு தொலைபேசி இணைப்பகத்தையே நடத்தி வந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இவர்கள் மீது Indian Telegraph Act இன் பிரிவின் கீழும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 122 மற்றும் 123 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவு தேசத்தின் மீது போர் தொடுக்க ஆயுதங்கள், தகவல்கள் உட்பட பொருட்களை சேகரிப்பது தொடர்பானதாகும்.
ATS இன் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் சஞ்சீவ் ஷாமி, குற்றவாளிகளில் ஐந்து பேர் குவாலியரில் பிடிபட்டதாகவும் மூன்று பேர் போபாலிலும், இரண்டு பேர் ஜபல்பூரிலும் ஒருவர் சட்னாவிலும் பிடிபட்டதாக கூறியுள்ளார். இதில் ஒருவர் பாச கவுன்சிலரின் சகோதரர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த 11 நபர்களில் சட்னாவில் கைது செய்யப்பட்ட பல்ராம் என்பவர் தான் இந்த குழுவின் மூலகர்த்தா என்று அவர் தெரிவித்துள்ளார். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்ராம் என்பவர் ஜம்முவில் உள்ள இருவரின் செயல்பாட்டிற்கு நிதி யுதவி அளித்து வந்ததாகவும் அவர்கள் பாகிஸ்தானில் இருந்து அவர்களை கையாள்பவர்களுக்கு அவ்வப்போது தகவல் அனுப்பி வைத்துகொண்டிருன்தனர் என்றும் இவர்கள் பல வங்கிக் கணக்குகள் மூலம் தேச விரோத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்த சத்விந்தர் மற்றும் தாடு என்பவர்களை ஜம்முவின் ஆர்.எஸ்.புரா பகுதியில் இருந்து கடந்த 2016 நவம்பர் கைது செய்ததாக ஷாமி தெரிவித்துள்ளார். இவர்கள் இந்தியாவின் பாதுகாப்பு நிலைகள் குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்ததாக ஷாமி தெரிவித்துள்ளார்.
பல்ராம் மற்றும் அவரது உதவியாளர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் தனி தொலைபேசி இணைப்பகங்களை நடத்தி வந்ததாகவும் இந்த இணைப்பகங்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ளவர்கள் பல்ராமின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைத்தனர் என்றும் அந்த பணம் பின்னர் ஜம்முவில் உள்ள ISI உளவாளிகளுக்கு அனுப்பப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிம் பாக்ஸ் எனப்படும் கருவிகள் மூலம் பாகிஸ்தானில் இருந்து வரும் அழைப்புகளை ,மறைத்து வேறு பகுதிகளில் உள்ள அழைப்புகளைப் போன்று மாற்றியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய இராணுவ அதிகாரிகள் போன்று ISI உளவாளிகள் அழைப்பு விடுத்து இராணுவ தகவல்களை பெற்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இது போன்ற மற்றுமொரு உளவு மோசடி குழுவினரை உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் ATS கைது செய்துள்ளது. இவர்கள் இந்த தொலைபேசி இணைப்பகங்கள் மூலம் உளவு வேலைகளில் ஈடுபட்டுள்ளதோடு மட்டுமல்லாது நாட்டின் தொலைத்தொடர்புத்துறைக்கும் பெருத்த வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் இதன் மூலம் சட்ட விரோத பண பரிமாற்றங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
https://www.facebook.com/puthiyavidial/
Thursday, February 9, 2017
உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் தனி குவளை எடுத்துச் செல்லும் தலித் பாஜக வேட்பாளர்
உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் தனி குவளை எடுத்துச் செல்லும் தலித் பாஜக வேட்பாளர்
By Wafiq Sha onFebruary 10, 2017
உத்திர பிரதேச தேர்தல் பிரச்சார வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வரும் வேலையில் பாஜக கட்சியிலும் உத்திர பிரதேச மாநிலத்திலும் நிலவி வரும் ஜாதிய ஒடுக்குமுறைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமீபத்தில் பாஜக வின் தேசிய தலைவரான அமித் ஷா உத்திர பிரதேசத்தில் உள்ள தலித்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு தங்கள் கட்சியில் சம உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது என்று பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது பாஜக வின் இக்லாஸ் பகுதி வேட்பாளரான ராஜ்விர் திலெர் என்பவர் தான் பிரச்சாரத்திற்கு செல்லும் போது உயர் ஜாதியினர் மத்தியில் இருக்கும் போது தரையில் அமர்வதும் தன்னுடன் எப்போதும் ஸ்டீல் டம்ளர் ஒன்று வைத்திருப்பதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குஜராத் உட்பட இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தலித் சமூக மக்கள் தங்கள் மீது திணிக்கப்படும் ஜாதிய ஒடுக்குமுறைகளை உடைத்தெறிந்து வரும் வேலையில் பாஜக வேட்பாளரின் இந்த செயல் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ராஜ்வீர் திலெர் போட்டியிடும் தொகுதி ரிசர்வ் தொகுதியாகும். ஆனால் இந்த தொகுதியில் சுமார் 90,000 ஓட்டுக்கள் உயர் சாதியினரான சாட் சமூகத்து மக்களுக்கான ஓட்டாகும். ஒரு வேட்பாளரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இந்த ஓடுக்களை தங்கள் கட்சி பெறுவதற்காகவே ராஜீவ் திலெர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த தொகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த வேறு பலரும் போட்டியிட்டாலும் அவர்கள் உயர் ஜாதியினரின் ஓட்டுக்களை பெறுவது கடினம் என்று கூறப்படுகிறது.
தனது இந்த நடவடிக்கைகளை குறித்து கருத்து தெரிவித்த ராஜீவ் திலெர், அது தங்கள் குடும்பத்தின் வழக்கம் என்று கூறியுள்ளார். மேலும் 40 வயதுடைய திலேர் தன்னை விட வயது குறைந்த அப்பகுதி ஜாட் தலைவரான மோகன் சிங்கின் கால்களை பலமுறை தொட்டு வணங்குகிறார். இன்னும் அவரிடம்,”நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னுடைய குறை என்னவென்று கூறுங்கள். நீங்கள் என் மீது கோபமாக இருந்தால் நான் உங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ வாக இருப்பதை விட உங்கள் வீட்டுக் காவலானாக இருக்கிறேன்” என்று அவர் மோகன் சிங்கிடம் கூறுவது அங்கு நிலவி வரும் ஜாதிய பாகுபாட்டின் உச்சத்தை காட்டுகின்றது.
இம்முறை ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்கள் சார்பில் ஒரு தலித் வேட்பாளரை கலமிரக்குகின்றனர். இந்நிலையில் தான் அவர்களின் அபிமானத்தை பெற திலெர் இப்படி செய்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் பதிவிக்காக தான் என்றென்றும் ஜாதிய கட்டுப்பாட்டிற்குள் ஒடுங்கி கிடக்க விரும்புவதை எந்த வித கூச்சமும் இல்லாமல் திலெர் கூறுவதையும் அறிய முடிகிறது. ஜாட் சமூகத்தினரிடம் தான் ஒரு வால்மீகியின் மகன் (தாழ்த்தப்பட்டவன்) என்றும், தான் என்றும் சம்பிரதாயத்தை மீறமாட்டேன் என்றும் இந்த உலகமே மாறினாலும் தான் மாறப்போவதில்லை என்றும் அவர் கூறுவது இதனை உறுதி செய்கிறது.
பதவிக்காக தன்மானத்தை இழப்பதும், சாதிய பாகுபாடுகள் நிறைந்த பகுதிகளில் அந்த பாகுபாடுகளுக்கு தீனி போடும் வகையில் வேட்பாளர்களை நிறுத்துவதும் பாஜகவின் கொள்கைகளையும் சாதி பாகுபாட்டு விஷயத்தில் அவர்களின் நிலைபாட்டையும் தெளிவு படுத்துகிறது.
https://www.facebook.com/puthiyavidial/
சிவ சேனா தலைவர் மீது கற்பழிப்பு வழக்கு
சிவ சேனா தலைவர் மீது கற்பழிப்பு வழக்கு
By Wafiq Sha onFebruary 9, 2017
மகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ்நகர் பகுதியை சேர்ந்த சிவா சேனா தலைவர் சுபாஷ் மன்சுல்கர் மீது விதல்வாடி காவல் நிலையத்தில் 35 வயது பெண்ணை கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனவரி 2015 இல் மன்சுல்கர் தங்கள் குடும்ப சொத்து பிரச்னையை தீர்ப்பதாக கூறி தன்னை அவரது வீட்டிற்கு அழைத்ததாகவும் அங்கு தன்னை அவர் வற்புறுத்தி கற்பழித்ததாகவும் அவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளர். இது தொடர்பான வழக்கு கடந்த திங்கள் கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். தங்கள் மீது சுமத்தப்பட்ட புகாருக்கு மன்சுல்கர் தரப்பில் இருந்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு சிவ சேனா தலைவர், முனிசிபல் தேர்தலின் போது சிவ சேனா கட்சியின் பெயரை கெடுப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/puthiyavidial/
நாஷிக்: லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய பாஜக தலைவர்கள்
நாஷிக்: லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய பாஜக தலைவர்கள்
By Wafiq Sha onFebruary 7, 2017
நாஷிக் முனிசிபல் கார்பரேஷன் தேர்தலுக்கு பாஜக முழுவதுமாக தயாராகி வரும் வேலையில் தற்போது அவர்களை தர்ம சங்கடமான நிலையில் தள்ளக்கூடிய வீடியோக்கள் பல வெளியாகியுள்ளன.
சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ ஒன்றில் நாஷிக் பாஜக செயலாளர் நானசாஹெப் சிலேத்தார் என்பவரும் அருண் ஷேண்டுர்நிகர் என்ற பாஜக தலைவரும் முனிசிபல் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் 2 லட்ச ரூபாய்யை நாஷிக் பாஜக அலுவலகத்தில் வைத்தே கேட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
மற்றொரு வீடியோ ஒன்றில் கோபால படில் என்ற பாஜக தலைவர் ஒருவர் தான் பத்து லட்ச ரூபாய் கொடுத்தும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததை குறித்து பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோக்கள் இவர்களைப் போல பணம் கொடுத்து தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போன எவரோ கோபத்தின் வெளிப்பாடை பதிவேற்றம் செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
தங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கும் இந்த வீடியோக்களைப் பற்றி இதுவரை பாஜக தலைவர்கள் யாரும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பாஜக சார்பில் புனேவில் போட்டியிட விரும்பிய இருவர் மீது நடத்தை விதிகளை மீறி பேரணி நடத்தியதற்காக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட பேரம் பேசப்பட்டு வரும் வேலையில் பாராளுமன்றத்தில் ஊழலால் தான் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது என்று மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/puthiyavidial/
கேரளா ஃபைசல் கொலை வழக்கு: ஆர்எஸ்எஸ் தலைவர் கைது
கேரளா ஃபைசல் கொலை வழக்கு: ஆர்எஸ்எஸ் தலைவர் கைது
By Wafiq Sha onFebruary 9, 2017
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உயர்ஜாதி இந்து ஒருவர் தன் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததால் அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர்.(பார்க்க செய்தி)
இந்த கொலை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மற்றும் திரூர் தாலுகாவின் ஆர்எஸ்எஸ் சாஹா ஒருங்கிணைப்பாளர் மடத்தில் நாராயணன் (வயது 47) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த ஃபைஸல் கொலை வழக்கில் 14 ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த கொலையின் முக்கிய சூத்திரதாரியாக நாராயணனை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. 1998 ஆம் வருடம் ஐயப்பன் என்ற கோவில் பூசாரி இஸ்லாத்தை ஏற்றதால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கிலும் நாராயாணன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். நாராயணன் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்திருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டிற்கு சென்ற இவ்வழக்கில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
பின்னர் உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டிற்கு சென்ற இந்த வழக்கில் இவர்களை கடந்த வருடம் ஜூலை மாதம் 20 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். தற்போது நடைபெற்ற ஃபைசலின் கொலையை தன்னை உச்ச நீதிமன்றம் வெளியிட்டதற்கு நான்கு மாதம் கழித்து நாராயணன் திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
ஃபைசல் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி அவர் பணியாற்றி வந்த மத்திய கிழக்கு நாடுக்கு செல்வதற்கு முன் கொலை செய்யப்பட்டார்.
https://www.facebook.com/puthiyavidial/
Sunday, February 5, 2017
காவல்துறையால் கற்பழிக்கப்பட்ட ஆதிவாசி பெண்கள்
பாதிக்கப்பட்ட பெண்களை கைது செய்த காவல்துறை
Sunday, February 5th, 2017 9:00 AM Wafiq Sha
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி பகுதியை சேர்ந்த இரண்டு ஆதிவாசி பெண்கள் காவல்துறையினரால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கற்பளிக்கப்பட்டதாக கூறப்படும் ஜனவரி 25 ஆம் தேதியில் இருந்து அவர்களை காணவில்லை என்பதால் அவரது சகோதரர் பாம்பே உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அன்றைய தினம் முழுவதும் அவரது மனு விசாரணைக்கு வராத காரணத்தினால் வீடு திரும்பியுள்ளார் அவர். அதே நிறம் இந்த கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்களும் வீடு திரும்பியுள்ளனர்.
இவர்களின் நிலையை கேட்டறிந்த குடும்பத்தினர் அப்பெண்களை அழைத்துக்கொண்டு தங்களது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து புகாரளிக்க வந்த நான்கு பேரை கடத்திச் சென்றுள்ளனர். முதலில் காவல்துறை சீருடையில் வந்த சிலர் சின்னு கோடா என்பவரை இழுத்துச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து தங்களை காவலர்கள் என்று கூறிக்கொண்டு சாதாரண உடுப்பில் வந்த சிலர் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் சைனு கோடா வின் மனைவி ஷீலா கோடாவையும் கடத்த முயற்சித்துள்ளனர். அவர்களிடம் அவர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் தான் என்பதற்கான அடையாள அட்டையை வழக்கறிஞர் கேட்டும் அதனை அவர்கள் தர மறுத்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற நேரம் இரவு 7:30 மணி என்பதனால் அந்த நேரத்தில் பெண்களை கைது செய்ய முடியாது என்று வழக்கறிஞர் அவர்களிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். ஆனால் சில நேரம் கழித்து மீண்டும் வழக்கறிஞர் அலுவலகம் வந்த அதே கும்பல் அந்த பெண்களை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளது என்று வழக்கறிஞர் நிஹால் சிங் ரதோட் தெரிவித்துள்ளார்.
இந்த பெண்கள் கற்பழிக்கப்பட்டதற்கும் அவர்கள் பின்னர் கடத்தப்பட்டதற்கும் காரணம் கட்சிரோலி பகுதி மக்கள் அந்தப் பகுதியின் சுர்ஜகாத் சுரங்க திட்டத்தை எதிர்ப்பது தான் என்று கூறப்படுகிறது. இதனாலேயே காவல்துறை மூலம் அவர்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் பல துன்புறுத்தல்கள் கொடுக்கப்படுவதாக வழக்கறிஞர் ரதோட் தெரிவித்துள்ளார்.
கட்சிரோலி காவல்துறை கமாண்டோக்களால்
ஆதிவாசி பெண்கள் கற்பழிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவர்களுக்காக நியாயம் கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் காவல்துறையோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களது வாகனத்தையும் பறித்து வைத்துள்ளது. இவர்கள் மீது காவல்துறையின் பணியை தடுத்தது கிளர்ச்சி செய்தது என்பது போன்ற வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
https://www.facebook.com/puthiyavidial/
Thursday, February 2, 2017
டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை போன்று முஸ்லிம் குடியேற்றத்திற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்: யோகி அதித்யாநாத்
டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை போன்று முஸ்லிம் குடியேற்றத்திற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்: யோகி அதித்யாநாத்
Tuesday, January 31st, 2017 7:23 PM Wafiq Sha
புதிய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவதற்கு இடைக்கால தடை வித்தித்து சமீபத்தில் உத்தரவிட்டார். இது பல எதிர்ப்பலைகளை அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இது போன்ற குடியேற்றத் தடையை இந்தியாவும் விதிக்க வேண்டும் என்று சர்ச்சை சாமியாரான யோகி அதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பாஜக வின் எம்.பி.யான யோகி அதியநாத் இக்கருத்தை திங்களன்று பேரணி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், டிரம்ப் அறிவித்தது போன்ற தடை இந்நாட்டில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தேவை என்று கூறியுள்ளார்.
இதோடு கைரானாவில் இந்துக்கள் கூட்டாக வெளியேற்றப்பட்டார்கள் என்று குற்றம் சாட்டி அது பாஜக ஆட்சிக்கு வந்தால் கடுமையாக கையாளப்படும் என்று கூறியுள்ளார். கைரானாவின் நிலையம் கஷ்மீரின் நிலையும் ஒன்று தான் என்று கூறிய அவர், 1990 களில் கஷ்மீரை விட்டு பண்டிட்கள் வெளியேறியதை மறந்துவிட்டீர்களா என்றும் இப்போது நீங்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் நீங்களும் பிற இடங்களுக்கு வெளியேற்றப்படுவீர்கள் என்று கூறியுள்ளார்.
தனது தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கூறிய இந்த கருத்துக்களுடன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நரேந்திர மோடியை தனது அரசியல் முன்னோடி என்று கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ஷியாவில் வசிப்பவர்கள் ரஷ்ஷிய சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்றும் சிறுபான்மையினர்களுக்கு என்று தனி சலுகைகள் எதுவும் புதின் வழங்க வில்லை என்றும் கூறிய அவர் இந்தியாவில் வசிப்பவர்கள் இந்திய சட்டங்களை மதித்து வாழ வேண்டும் என்றும் அதனை பின்பற்ற மறுப்பவர்கள் ஷரியத் சட்டங்கள் எங்கு உள்ளதோ அங்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தான் கூறியது போன்று காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பஹுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூற அவர்களுக்கு தைரியம் உள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஞாயிறு ஹிந்து யுவ வாஹினி அமைப்பின் மாநில தலைவரை அவரது பொறுப்பில் இருந்து அதித்யநாத் நீக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவர் பாஜகவிற்கு எதிராக வரும் தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அதித்யநாத் யுவ வாஹினி அரசியல் அமைப்பு அல்ல என்று அதனால் அது அரசியலில் போட்டியிடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இவரின் இந்த கருத்துக்கு பதிலளித்த தெரிவித்த யுவ வாஹினியின் சுனில் சிங் கூறுகையில், “ஏறத்தாழ ஹிந்து யுவ வாஹினியின் அனைத்து உறுப்பினர்களும் தங்களுடன் உள்ளனர் என்றும் அதித்யநாத் ஒரு மனதாக எங்களை வெளியேற முடியாது என்றும் அது சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளனர். முன்னதாக யுவ வாஹினி சார்பில் ஆறு தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் சுனில் சிங் தெரிவித்திருந்தார். இவர்களின் இந்த முடிவு யோகி அதித்யனாத்தை உத்திர பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராக நிறுத்த பாஜக மறுப்பு தெரிவித்தது காரணம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் தன்னை உத்திர பிரதேச மாநில முதல்வர் வேட்பாளராக நிறுத்த பாஜக சம்மதிக்காததால் அந்த கூட்டத்தை விட்டு அவர் பாதியில் வெளியேறியதாக கூறப்படுகிறது.
Wednesday, February 1, 2017
போலி என்கெளவுண்டரில் கொல்லப்பட்ட சாதித் ஜாமால் தந்தை 50 லட்சம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு
போலி என்கெளவுண்டரில் கொல்லப்பட்ட சாதித் ஜாமால் தந்தை 50 லட்சம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு
Wednesday, February 1st, 2017 10:00 AM Wafiq Sha
2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி குஜராத்தின் அஹமதாபாதில், அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை கொலை செய்ய வந்த லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதி என்று குற்றம்சாட்டி சாதிக் ஜமால் போலி என்கெளவுண்டர் மூலம் கொலை செய்யப்பட்டார். தற்போது சாதிக் ஜமாலின் தந்தை அவரது கொலைக்கு மாநில அரசு 50 லட்ச ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக நீதிபதி ஜே.பி.பர்திவாளா மாநில அரசிற்கு கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகவும் அங்கு இது போலி என்கெளவுண்டரா இல்லையா என்று தீர்மானிக்கப்படவில்லை என்றும் அதனால் தற்போது நஷ்டஈடு பற்றிய கேள்விக்கு தற்போது இடமில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் பல விசாரணைகளை சி.பி.ஐ நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது கொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நியாம் கேட்டும் அவரது இழப்பிற்கு 50 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டும் ஜமால் மெஹ்தர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து அவர் கூறுகையில், “காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே தனது மகன் கொலை செய்யப்பட்டது இந்திய அரசியல் சாசனப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்றும் இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் 2009 ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் குஜராத் மாநில அரசு, போலி என்கெளவுண்டரில் கொலை செய்யப்பட்ட சொராபுதீன் ஷேக் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக 2012 இல் சி.பி.ஐ தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், சாதிக் ஜமாலின் என்கெளவுண்டர் போலியானது என்று சி.பி.ஐ கூறியிருந்தது. மேலும் சாதிக் ஜமால் மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து அகமதாபாத்திற்கு காவல்துறை அதிகாரி தருண் பரோட் மற்றும் இன்னும் ஏழு அதிகாரிகளால் கொண்டுவரப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சாதிக் ஜமால் நகர குற்றவியல் காவல்துறையின் சட்ட விரோத கட்டுப்பாட்டில் இருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்றும் சி.பி.ஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/puthiyavidial/