Thursday, February 9, 2017

நாஷிக்: லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய பாஜக தலைவர்கள்

நாஷிக்: லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய பாஜக தலைவர்கள்

By Wafiq Sha onFebruary 7, 2017

நாஷிக் முனிசிபல் கார்பரேஷன் தேர்தலுக்கு பாஜக முழுவதுமாக தயாராகி வரும் வேலையில் தற்போது அவர்களை தர்ம சங்கடமான நிலையில் தள்ளக்கூடிய வீடியோக்கள் பல வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ ஒன்றில் நாஷிக் பாஜக செயலாளர் நானசாஹெப் சிலேத்தார் என்பவரும் அருண் ஷேண்டுர்நிகர் என்ற பாஜக தலைவரும் முனிசிபல் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் 2 லட்ச ரூபாய்யை நாஷிக் பாஜக அலுவலகத்தில் வைத்தே கேட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

மற்றொரு வீடியோ ஒன்றில் கோபால படில் என்ற பாஜக தலைவர் ஒருவர் தான் பத்து லட்ச ரூபாய் கொடுத்தும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததை குறித்து பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோக்கள் இவர்களைப் போல பணம் கொடுத்து தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போன எவரோ கோபத்தின் வெளிப்பாடை பதிவேற்றம் செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

தங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கும் இந்த வீடியோக்களைப் பற்றி இதுவரை பாஜக தலைவர்கள் யாரும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பாஜக சார்பில் புனேவில் போட்டியிட விரும்பிய இருவர் மீது நடத்தை விதிகளை மீறி பேரணி நடத்தியதற்காக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட பேரம் பேசப்பட்டு வரும் வேலையில் பாராளுமன்றத்தில் ஊழலால் தான் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது என்று மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/puthiyavidial/

No comments:

Post a Comment