Saturday, January 9, 2016

சாலையை சரி செய்ய SDPI நூதன போராட்டம் மேலப்பாளையம்

நெல்லை

மேலப்பாளையம் பழுதான சாலைகளை சரி செய்ய கோரி  SDPI கட்சி தூய்மை போராட்டம்

09.01.2016

SDPI கட்சி பசுமை மேலப்பாளையம் திட்டத்தின் சார்பாக  சாலையில் சென்ற மக்களுக்கு சுவாச கவசம் (mask )கொடுத்து தூய்மை பிரச்சாரம்

மேலப்பாளையம் சாலைகள் மிகவும் பழுதடைந்து வாகன போக்குவரத்தால் தூசியாக பறக்கிறது

ஏற்கனவே மக்கள் மழைக்காலங்களில் காச்சலில் அவதி பட்டு மீளாத நிலையில் அரசின் அலட்சிய போக்கால் மக்களுக்கு ஆஸ்துமா ,அலர்ஜி வியாதிகள் உருவாக  தூசி காரணமாக அமைகிறது .

மக்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் விரைவில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

இல்லையேல் SDPI கட்சி புதுவிதமான  வீரியமான மக்கள் நலன் காக்கும் போராட்டத்தை தொடர்ந்து  நடத்தும்

இன்று நடைபெற்ற போராட்டத்தில் SDPI கட்சி மேலப்பாளையம் பகுதி தலைவர் பஷீர் ,

செயலாளர் மீரான் ,துணைத்தலைவர் கல்வத் ,தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் ,37 வார்டு தலைவர் காதர் ,மற்றும் முகம்மது கொளஸ் ஆகியோர் கலந்து கொண்டு

சந்தை ரவுண்டானா ,V.S.T பள்ளி வாசல் ஆகிய இடங்களில் வாகனங்களில் சென்ற மக்களுக்கு சுவாச கவசம் (Mask ) வழங்கினர்

https://m.facebook.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-961871540494053/

Sunday, January 3, 2016

இந்திய சுதந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்ஷா மரணம்

இந்திய சுதந்திர போராட்ட தியாகியும், நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்துக்கு கோடிகளை கொடையளித்த வள்ளல் தியாகி எம்.கே.எம். அமீர் ஹம்சா மரணமடைந்தார். இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் நல்லடக்கம் இன்று (04-01-2016) மாலை 4:30 மணிக்கு (அஸருக்கு) நடைபெறும்.


முகவரி : 28, வீராசாமி தெரு, தங்கசாலை, (மின்ட்), சென்னை.


இந்திய சுதந்திர வரலாற்றில், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு பல லட்சங்களை (இன்றைய மதிப்பில் பல கோடிகள்) வாரி வழங்கி, அந்த போராட்டத்தில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த தியாகி அமீர் ஹம்சா தனது இறுதி நாட்களில் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தார். வறுமையின் காரணமாக, மருத்துவ செலவுகளை கூட கவனிக்க மிகுந்த சிரமப்பட்டார். இந்த தியாகிக்கு தமிழக அரசு உதவி செய்ய மறந்த நிலையில், சில நல்லுள்ளங்கள் தியாகி அமீர் ஹம்சா அவர்களுக்கு உதவினர். இந்நிலையில் அவரை மரணம் தழுவியது.


யார் இந்த அமீர் ஹம்சா?


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை பர்மாவில் துவக்கியபோது, அங்கு தங்கம் மற்றும் வைர நகைகள் வியாபாரம் செய்துவந்துள்ளார் அமீர் ஹம்சா. நேதாஜியின் படைக்கு ஏகப்பட்ட பொருளுதவி செய்ததால் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு, கடுமையான விசாரணைக்குள்ளானார்.


வள்ளல் அமீர் ஹம்ஸா அவர்களும் அவரின் தந்தையாரும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு பல லட்சங்களை அள்ளித் தந்திருக்கின்றனர். 


1943 –ல் நேதாஜி கலந்து கொண்டு பேசிய கூட்டத்தில் நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலையை ஏலம் விட்டனர். அந்த மாலையை மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார் வள்ளல் அமீர் ஹம்ஸா அவர்கள்.


ஆரம்பத்தில் அமீர் ஹம்ஸாவின் தந்தையார் இந்திய தேசிய இராணுவத்தில் நேதாஜியின் படைப்பிரிவில் அமீர் ஹம்ஸா இடம் பெற்றிருப்பதைக் கண்டு, பாசத்தின் காரணமாக அமீர் ஹம்ஸா அவர்களை வீட்டில் சிறைவைத்தார்.


இது பற்றிக் கேள்வி பட்ட நேதாஜி, அமீர் ஹம்ஸாவின் தந்தையாரை அழைத்து இந்திய தேச விடுதலையின் அவசியம் குறித்து உணர்ச்சிப் பொங்க உரையாடினார்.


நேதாஜியின் பேச்சால் கவரப்பட்ட அமீர் ஹம்ஸாவின் தந்தையார் அங்கேயே “தமது பாக்கெட்டிலிருந்து செக் புக்கை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான காசோலையை நேதாஜியின் கையில் கொடுத்ததோடு மாத்திரமல்லாமல், உடன் அழைத்து வந்த தமது மகன் அமீர் ஹம்ஸாவை இந்த தேச விடுதலைக்காக உங்கள் கையில் ஒப்படைக்கின்றேன்” என்றார்கள்.


நேதாஜியின் 47 –வது பிறந்த நாளில் (23.01.1944) ஒரு லட்சத்துக்கான காசோலையோடு, தான் கையில் அணிந்திருந்த வைர மோதிரத்தையும் பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.


(நூல்: நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம்.)


மத்திய அரசாங்கம் தரும் பென்ஷனை மட்டுமே நம்பியிருக்கும் இவர், தியாகிகள் கோட்டாவில் தனக்கு ஒரு கேஸ் ஏஜென்ஸி அனுமதி வழங்கக் கோரி பல வருடங்களாக போராடி இருக்கிறார். ‘மத்தவங்களுக்கு 40 லட்சம் ஆகும்! உங்களுக்கு வேணா 20 லட்சத்துல முடிச்சுக் கொடுக்குறோம். சீக்கிரம் தொகையை ஏற்பாடு பண்ணுங்க!’ என்று ஓர் அமைச்சர் இவருக்கு வாக்குறுதி(!) கொடுத்தாராம் ??


நமது இந்திய தேசத்தின் பொன் விழா ஆண்டில் சென்னையில் வசித்து வந்த வள்ளல் அமீர் ஹம்ஸாவை கௌரவிக்க இந்த தேசத்தின் எந்த ஒருவருக்கும் மனம் வரவில்லை!


நாட்டின் விடுதலைக்காக உழைத்திட்ட தியாகி அமீர் ஹம்சா அவர்களின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்!

மேலப்பாளையத்தில் நடைபெற்ற டெங்கு தடுப்பு மற்றும் நிலவேம்பு வழங்கும் முகாம்

SDPI கட்சி மற்றும் அருள் சித்தா கிளினிக் இணைந்து நடத்திய  டெங்கு தடுப்பு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

03.01.2016 ஞாயிறு காலை 10 மணி அளவில்

SDPI கட்சி பசுமை மேலப்பாளையம் திட்டத்தின் மூலமாக
தொடர் மருந்துவ  முகாம்களை நடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக மேலப்பாளையம்

1, மேலப்பாளையம் அரசு மருத்துவ மனை அருகில்

2,தண்டன் லெப்பை தெரு

3, மோத்தை மீரா பிள்ளை தெரு (சீனிவீட்டு தெரு )

4, ஆலப்பிள்ளை தெரு

5,உமர் புலவர் தெரு

6,செல்வகாதர் தெரு

ஆகிய பகுதிகளில் நடைபெற்றது

டெங்கு ,சிக்கன் குன்யா ,வைரஸ் காய்ச்சல் ,டைஃபாய்டு ,விஷகாச்சலை குணப்படுத்தகூடிய நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில்
பொதுமக்கள் ,இளைஞர்கள் ,சிறுவர்கள் அனைவரும் கலந்து 2500 மேற்பட்ட மக்கள் கலந்து  பயன்பெற்றனர் 

முகாமை மேலப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் திரு.  சாமி  அவர்கள் துவங்கி வைத்தார்கள்

SDPI கட்சி மாவட்ட தலைவர் K.S ஷாகுல் ஹமீது உஸ்மானி தலைமை தாங்கினார்கள்
தொகுதி செயலாளர் மின்னத்துல்லாஹ் ,தொகுதி செயல்குழு உறுப்பினர் சலீம் ,பகுதி தலைவர் பஷீர் ,துணைத்தலைவர் கல்வத் , 31வார்டு செயலாளர் அசன் பசிரி ,37 வார்டு கிழக்கு கிளை தலைவர் அப்துல் காதர் மேற்கு கிளைத்தலைவர் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்

முகாம் நிறைவில் பசுமை மேலப்பாளையம் மருத்துவ குழு தலைவர் முகம்மது லெப்பை நன்றி கூறினார்

https://m.facebook.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-961871540494053/