Saturday, May 20, 2017

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மேலப்பாளயம் சிறுவனை காணவில்லை

இந்த படத்தில் இருக்கும் சிறுவன் பெயர் சுஹைல் வயது 12 இச்சிறுவனை இன்று (20/05/2017) மதியம் தன் தாய் தந்தையருடன் போத்தீஸ் (டவுண்) சென்றிருந்த போது காணவில்லை காணமல் போன சமயம் வெள்ளை நிற சட்டையும் நீள நிற ஜீன்ஸும் அணிந்திருந்தான் இச்சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தால் கீழ்கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளவும்.

ஆரிஃப் (தந்தை) +91 7418584708
ஹஸன் (மாமா)  +91 9840955471
அப்துல்லாஹ் (சித்தப்பா)  8110881603
update 10.17pm

உறுதி செய்யப்பட்ட தகவல் அதிகம் பகிரவும்

https://m.facebook.com/story.php?story_fbid=1911287482484931&substory_index=0&id=1406440819636269

Tuesday, May 16, 2017

16/05/2017

பேட்மாநகரத்தை சார்ந்த பிர்தவ்ஸ்  என்ற சகோதரிக்கு  அவசர தேவைக்காக இரண்டு யூனிட் ரத்ததானம்  நெல்லை லைப் லைன் ரத்த வங்கியில் வழங்கப்பட்டது

குருதி கொடையாளர்கள்

இம்ரான் மற்றும் ஹாரூன் - மேலப்பாளயம்

Monday, May 15, 2017

#பாளையங்கால்வாய் #மீட்போம்
ஊரின் நீர் வளம் #காப்போம்

(நம்ம ஆறு)

மக்கள் குரல்

ஜவஹர் - சமூக ஆர்வலர் -வெள்ளை கலீபா சாஹிப் தெரு

மேலப்பாளயம்

14/05/2017

பசுமை மேலப்பாளயம் திட்டம்

மக்கள் நலனுக்காக இச்செய்தியை  பகிருங்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=1663959313618602&id=961871540494053

Saturday, May 13, 2017

#சுகாதாரம் #பேணுவோம்

தற்போது கோடை விடுமுறை என்பதால் ஞாயிற்று கிழமைகளில் நமது ஊரில் அதிகமான திருமணங்கள் நடைபெறும்

நாமும் விருந்துக்கு சாப்பிட செல்வோம்

நமது தாளா களத்தில் அமர்ந்து சாப்பிடுவோம்
நமது தேவைக்கு தகுந்த உணவை அளவோடு உண்ண முயல வேண்டும்
அதிகமாக சாப்பாட்டை களத்தில் கொட்டி வீண் விரையம் செய்ய வேண்டாம்

பெண்கள் இவ்விசயத்தில் அதிக கவனம் எடுத்து கொள்வது சிறந்தது

அதைபோல்  திருமண வீட்டார் எச்சிலை தனியாக டிரம்மில் சேர்த்து முறையாக அப்புறப்படுத்துவது நல்லது

வாட்டர் பாக்கட்டுகளை போட சாக்குபையோ அல்லது டப்புகளையோ அந்த வீட்டின் முன் வைத்து அதில் போடுவது சிறந்தது பின்பு தனியாக கட்டி குப்பையை அப்புறப்படுத்துங்கள் (பழைய கேத்தல் முறையை செயல்படுத்தினால் மேலும் நலம்)

(இன்னும் நிறைய விசயங்கள் உள்ளன மக்கள் புரிந்து நடந்துகொண்டால் ஊரே நலம் )

தயவு செய்து எச்சிசோற்றை பாளையங்கால்வாய் யில் தட்டாதீர்கள் நமது சந்ததிகளை நோய்யில் தள்ள நாமே காரணமாக ஆகிவிட வேண்டாம்

மக்கள் நலனுக்காக
பசுமை மேலப்பாளயம் திட்டம்

Thursday, May 11, 2017

மேலப்பாளயம் நமது கரீம் நகர் மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளியில்

12/05/2017

மவ்லானா மவ்லவி  K.k.s.m தெஹ்லான் பாக்கவி - மாநில தலைவர் - சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா (SDPI)

இந்த வார ஜும்ஆ கொத்பா உரையாற்றுகிறார்கள்
(குத்பா உரை இன்ஷா அல்லாஹ் 12.15 pm க்கு ஆரம்பம் ஆகும் தொழுகை 1.05 pm க்கு நடைபெறும்)

அனைவரும் வருக இறையருள் பெருக

இவண்

மஸ்ஜிதுல் ஹுதா ஜீம்ஆ பள்ளிவாசல்
க்ரீம் நகர் - மேலப்பாளயம்- 9944281881

Thursday, May 4, 2017

தயிர், எண்ணெய்யில் ஊழல் புரியும் மத்திய ரயில்வே

By Wafiq Sha onMay 3, 2017

சமீபத்திய தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் ஒன்றில் மத்திய ரயில்வே சந்தை விலையை விக பல மடங்கு உயர்வான விலைக்கு பொருட்களை வாங்கியது தெரியவதுள்ளது.

சமூக ஆர்வலர் அஜெய் போஸ் என்பவர் மத்திய ரயில்வேயின் கேடரிங் துறை மிக மோசமான நஷ்டத்தில் இயங்குவதை கேள்விப்பட்டு அது தொடர்பாக தகவல் அறியும் விண்ணப்பம் ஒன்றை பதிவு செய்தார். அதில் ஒரு கிலோ அமுல் தயிர் 9720 ரூபாய்க்கு பெறப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில்,”கடந்த ஜூலை 2016 ஆம் ஆண்டு இது தொடர்பாக நான் தகவல் அறியும் விண்ணப்பம் ஒன்றை பதிவு செய்தேன். ஆனால் அதற்கு மத்திய ரயில்வேயிடம் இருந்து பதில் வரவில்லை. அவர்கள் எதையோ மறைக்க நினைத்தது போன்று இருந்தது. பின்னர் மீண்டும் தகவல் கேட்டு விண்ணப்பிக்கவே நான் கேட்கும் தகவல்களை 15 நாட்களுக்கும் தருமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இருந்தும் இந்த பதிலை அவர்கள் பல மாதங்களாக தரவில்லை.” என்று கூறியுள்ளார்.

தனது விண்ணப்பத்திற்கு வேண்டுமென்றே ரயில்வே துறை பதிலளிக்கவில்லை என்பதை அறிந்த போஸ் மீண்டும் ஒன்று விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளார். இதில், அவருக்கு அதிர்ச்சியூட்டும் பதில்கள் கிடைத்துள்ளன. 25 ரூபாய் மதிப்பிலான 100 கிராம் தயிர் 972 ரூபாய்க்கு பெறப்பட்டது முதல் பல முறைகேடுகள் இதில் வெளியாகியுள்ளது. பல பொருட்களை இரயில்வே சந்தை விலையை விட பன்மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியது தெரியவந்துள்ளது.

இது போன்ற ஊழல்களினால் தான் ரயில்வே பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றது என்று போஸ் கூறியுள்ளார். தனது விண்ணப்பத்திற்கு பல மாதங்களாக தாமதப்படுத்தி பதில் அளித்த ரயில்வே முழு வருடத்திற்கான தகவல்களை நான் கேட்ட போதும் தங்களது பதிலில் சில மாதங்களுக்கான தகவல்களை மட்டுமே தந்துள்ளது என்று கூறியுள்ளார். அப்படி அவர்கள் அளித்த பதிலில், எலும்பில்லாத கோழி இறைச்சி, துவரம் பருப்பில் இருந்து டிஸ்யு பேப்பர் வரை அதிக விலை கொடுத்து பெறப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ரயில்வேயின் பதிலில் 58 லிட்டர் எண்ணெய் 72, 034 ரூபாய்களுக்கு பெறப்பட்டுள்ளதாக குரிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர், 1241 ரூபாய்க்கு பெறப்பட்டுள்ளது. 15 ரூபாய் மதிப்பிலான டாட்டா உப்பு 49 ரூபாய்க்கு பெறப்பட்டுள்ளது, தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் ஒரு பாட்டிலுக்கு 59 ரூபாய் கொடுத்து பெறப்பட்டுள்ளது.

போஸ் பெற்ற இந்த தகவல்களில் பொருட்களின் விநியோகத்திளும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. வெறும் 250 கிலோ மாவுகளை மட்டும் ரயில்வே வாங்கிய நிலையில் 450 கிலோ விநியோகம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. 20 கிலோ மைதா பெறப்பட்டுள்ள நிலையில் 35 கிலோ விநியோகம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. 255 கிலோ பாஸ்மதி அரிசி பெறப்பட்டுள்ள நிலையில், 745கிலோ விநியோகம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ரயில்வே காண்டீன்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று ரயில்வே கூறியிருக்க அது ஏன் என்ற உண்மையை இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல் உணர்த்துகிறது.

இது குறித்து மகத்திய ரயில்வேயின் டிவிஷனல் ரயில்வே மேலாளர் ரவீந்திர கோயல் கருத்து தெரிவிக்கையில், “இது டைப்பிங் பிழையாக இருக்கக் கூடும். ஆனாலும் அது குறித்து நான் விசாரிக்கின்றேன்.” என்று கூறியுள்ளார்.

இரயில்வேயில் பொருட்களை பெறுவது குறித்து, “இந்த பொருட்கள் அனைத்தையும் பெறுவதற்கு முறையான வழிமுறைகள் உள்ளது” என்றும் “பொருட்களுக்கான விலையை கொள்முதல் குழு நிர்ணயிக்கும்” என்றும் மத்திய ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் சுபோத் ஜெயின் கூறியுள்ளார்.

இது குறித்து ரயில்வே துறையில் பணியாற்றுபவர்கள், இது போன்ற ஊழல் முன்னரும் நடைபெற்றுள்ளது என்றும் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் நஷ்டக்கனக்கு காட்டப்படுகிறது என்றும் அதற்கு காரணம் இது போன்ற ஊழல்கள் தான் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மண்டல ரயில்வே பயனாளர்களின் ஆலோசனைக் குழு (ZRUCC) உறுப்பினர் சுபாஷ் குப்தா மற்றும் அதன் தலைவர் ரயில் பிரவாசி கருத்துத் தெரிவிக்கையில், “இது மிகப்பெரிய பிரச்சனை, இது உடனடியாக ரயிவே உயர் அதிகாரிகளால் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை. பல பொருட்கள் அதிக விலைக்கு பெறப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் மற்றும் விநோயகத்தில் உள்ள வேறுபாடு வெறும் டைப்பிங் தவறு என்று எடுத்துக்கொள்ள முடியாது. இது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, இதில் பாதிக்கப்படுபவர்கள் ரயில் பயணிகள் தான். இது போன்ற ஊழல்களினால் ரயில்வே நஷ்டத்தில் இயங்க ரயில் பயணச்சீட்டு விலைகள் உயர்த்தப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் குறைக்கப்படுகின்றது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளனர்.

https://www.facebook.com/puthiyavidial/

அஸ்ஸாமில் பசுக்களை திருடியதாக சந்தேகித்து இரண்டு முஸ்லிம்கள் கொலை

By Wafiq Sha onMay 3, 2017

அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த அபூ ஹனிஃபா மற்றும் ரியாசுதீன் அலி ஆகியோர் பசுவை திருடினார்கள் என்ற சந்தேகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

அகலாக் கொலையில் தொடங்கி தொடர்கதையாகி வரும் பசுக்கொலைகளின் பட்டியலில் இந்த கொலையும் இணைந்துள்ளது.

இதுதொடர்பாக நாகோன் மாவட்ட காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து நாகோன் பகுதி காவல்துறை ஆய்வாளார் தேப்ராஜ் உபாத்யாய் கூறுகையில், “அந்த இருவரும் மாடுகளை திருட வந்தார்கள் என்று கூறி அந்த கிராம மக்களால் விரட்டப்பட்டு கட்டைகளால் தாக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அவர்களை இரவு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது அவர்கள் உயிரிழந்துவிட்டனர்.” அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சி ஒன்று வட்டார தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் அந்த இருவரின் கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவர்களை அந்த கிராம மக்கள் தாக்குவது பதிவாகியுள்ளது.

அகலாக், பெஹ்லு கான் வரிசையில் அபூ ஹனிஃபா மற்றும் ரியாசுதீனும் தற்போது சேர்ந்துள்ளனர். இந்த அனைத்து வன்முறைகளிலும் காவல்துறை வெறும் பார்வையாளர்களாகவும் அல்லது இந்த வன்முறைகளை உரிய நேரத்தில் தடுக்காதவர்களாகவும் இருந்துள்ளது.

ராஜஸ்தான் ஆழ்வார் தாக்குதலிலும் கூட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற 11 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை நாட்டில் சுமார்  பத்து பசுக்கொலைகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/puthiyavidial/

04/05/2017

நெல்லை ஆத்தூரை சார்ந்த சம்சு நிஷா என்பருக்கு அவசர தேவைக்காக ஒரு யூனிட் ரத்ததானம்  நெல்லை ஷிபா ரத்த வங்கியில் வழங்கப்பட்டது

குருதி கொடையாளர்

பீரப்பா- மேலப்பாளையம்

Wednesday, May 3, 2017

#தாமிரபரணியில் பன்னாட்டு  கோக்-பெப்சிகுளிர்பான  நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க மீண்டும் உத்தரவிடப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதோடு அந்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் - SDPI அம்பை தொகுதி கூட்டத்தில் தீர்மானம்

SDPI கட்சியின் அம்பை தொகுதி செயற்குழு கூட்டம்:

SDPI கட்சியின் அம்பை தொகுதி செயற்குழு கூட்டம் தொகுதி தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமையில் வீரவநல்லூரில் நேற்று 02/05/2017 செவ்வாய்க்கிழமை மாலை நடை பெற்றது.

தொகுதி செயலாளர் கல்லிடை சுலைமான் வரவேற்புரையாற்றினார்.

தொகுதி துணைத்தலைவர் ரத்தீஸ் முன்னிலை வகித்தார். தொகுதி நிலவரம் மற்றும் தொகுதி  மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்தமடை,வீரவநல்லூர், கல்லிடைகுறிச்சி, வீ.கேபுரம் நகரம் மற்றும் கிளை  நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

தொகுதி நிலவரங்கள் குறித்து கீழ்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

# தாமிரபரணியில் பன்னாட்டு  கோக்-பெப்சிகுளிர்பான  நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க மீண்டும் உத்தரவிடப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதோடு அந்த உத்தரவினை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

#கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் திம்மராஜபுரம் பகுதிக்கு அருகாமையில்  கழிவுநீர் கலப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பொதுப்பணித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இம்முயற்சியை மக்கள் நலனுக்காக  பொதுப்பணித்துறை  கைவிட வேண்டும்.அதற்கான மாற்றுவழிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

#கல்வி நிறுவனங்களில் மதவாத சிந்தனைகளை உட்புகுத்தி    மதநல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் RSS அமைப்பை வன்மையாக கண்டிப்பதோடு ஒற்றுமையின் புகலிடமாக திகழும் அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்வி நிறுவனமான PSN கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் RSS ன் முகாமை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.

#கல்லிடைக்குறிச்சி அருகிலுள்ள வைராவிகுளம் ஊராட்சிக்குட்பட்ட சங்கமுத்து நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் பிரச்சனை நிலவி வருகின்றது. பலமுறை இது சம்மந்தமாக முறையிட்டும் முறையா நடவடிக்கை மேற்கொள்ளாத வைராவி குளம் ஊராட்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பதோடு,சீரான குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.

#அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எந்த பகுதியிலும்  டாஸ்மாக்  கடைகளை அமைக்க கூடாது என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வதோடு, கள்ளத்தனமாக சட்டவிதிமுறைகளை மீறி மறைமுக விற்பனை செய்து வரும் நபர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மீண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் பட்சத்தில் மக்களை திரட்டி ஜனநாயக வழியில் அறப் போராட்டங்களை டாஸ்மாக்  இல்லாத பகுதியாக மாற்றும் வரை நடத்துவோம் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.

#கல்லிடைக்குறிச்சி வாய்க்கால் பாலம்  கடையோரப் பகுதிகளில் தடுப்புசுவர் இல்லாமல் ஆபத்து ஏற்படும் சூழல் இருந்து வருகின்றது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற் கொள்ள இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.

#பாபநாசம் முதல் திருநெல்வேலி, திருநெல்வேலி முதல் பாபநாசம் வழி செல்லக்கூடிய பேருந்துகளின் சேவை இரவு நேரங்களில் இல்லாமல் இருப்பது மக்களை அவதிக்குள்ளாக்குகிறது.

மக்களின் தேவையறிந்து பேருந்து சேவைகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட துறையினை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

இக்கூட்டம் இறுதியாக தொகுதி பொருளாளர் வழக்கறிஞர் முஹம்மது ஷfபி நன்றி கூறினார்

இப்படிக்கு

பீர்மஸ்தான்
அம்பை தொகுதி தலைவர்
SDPI கட்சி நெல்லை கிழக்கு மாவட்டம்
9688644688