#சுகாதாரம் #பேணுவோம்
தற்போது கோடை விடுமுறை என்பதால் ஞாயிற்று கிழமைகளில் நமது ஊரில் அதிகமான திருமணங்கள் நடைபெறும்
நாமும் விருந்துக்கு சாப்பிட செல்வோம்
நமது தாளா களத்தில் அமர்ந்து சாப்பிடுவோம்
நமது தேவைக்கு தகுந்த உணவை அளவோடு உண்ண முயல வேண்டும்
அதிகமாக சாப்பாட்டை களத்தில் கொட்டி வீண் விரையம் செய்ய வேண்டாம்
பெண்கள் இவ்விசயத்தில் அதிக கவனம் எடுத்து கொள்வது சிறந்தது
அதைபோல் திருமண வீட்டார் எச்சிலை தனியாக டிரம்மில் சேர்த்து முறையாக அப்புறப்படுத்துவது நல்லது
வாட்டர் பாக்கட்டுகளை போட சாக்குபையோ அல்லது டப்புகளையோ அந்த வீட்டின் முன் வைத்து அதில் போடுவது சிறந்தது பின்பு தனியாக கட்டி குப்பையை அப்புறப்படுத்துங்கள் (பழைய கேத்தல் முறையை செயல்படுத்தினால் மேலும் நலம்)
(இன்னும் நிறைய விசயங்கள் உள்ளன மக்கள் புரிந்து நடந்துகொண்டால் ஊரே நலம் )
தயவு செய்து எச்சிசோற்றை பாளையங்கால்வாய் யில் தட்டாதீர்கள் நமது சந்ததிகளை நோய்யில் தள்ள நாமே காரணமாக ஆகிவிட வேண்டாம்
மக்கள் நலனுக்காக
பசுமை மேலப்பாளயம் திட்டம்
No comments:
Post a Comment