#தாமிரபரணியில் பன்னாட்டு கோக்-பெப்சிகுளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க மீண்டும் உத்தரவிடப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதோடு அந்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் - SDPI அம்பை தொகுதி கூட்டத்தில் தீர்மானம்
SDPI கட்சியின் அம்பை தொகுதி செயற்குழு கூட்டம்:
SDPI கட்சியின் அம்பை தொகுதி செயற்குழு கூட்டம் தொகுதி தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமையில் வீரவநல்லூரில் நேற்று 02/05/2017 செவ்வாய்க்கிழமை மாலை நடை பெற்றது.
தொகுதி செயலாளர் கல்லிடை சுலைமான் வரவேற்புரையாற்றினார்.
தொகுதி துணைத்தலைவர் ரத்தீஸ் முன்னிலை வகித்தார். தொகுதி நிலவரம் மற்றும் தொகுதி மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்தமடை,வீரவநல்லூர், கல்லிடைகுறிச்சி, வீ.கேபுரம் நகரம் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
தொகுதி நிலவரங்கள் குறித்து கீழ்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டது.
# தாமிரபரணியில் பன்னாட்டு கோக்-பெப்சிகுளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க மீண்டும் உத்தரவிடப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதோடு அந்த உத்தரவினை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
#கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் திம்மராஜபுரம் பகுதிக்கு அருகாமையில் கழிவுநீர் கலப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பொதுப்பணித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இம்முயற்சியை மக்கள் நலனுக்காக பொதுப்பணித்துறை கைவிட வேண்டும்.அதற்கான மாற்றுவழிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
#கல்வி நிறுவனங்களில் மதவாத சிந்தனைகளை உட்புகுத்தி மதநல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் RSS அமைப்பை வன்மையாக கண்டிப்பதோடு ஒற்றுமையின் புகலிடமாக திகழும் அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்வி நிறுவனமான PSN கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் RSS ன் முகாமை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.
#கல்லிடைக்குறிச்சி அருகிலுள்ள வைராவிகுளம் ஊராட்சிக்குட்பட்ட சங்கமுத்து நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் பிரச்சனை நிலவி வருகின்றது. பலமுறை இது சம்மந்தமாக முறையிட்டும் முறையா நடவடிக்கை மேற்கொள்ளாத வைராவி குளம் ஊராட்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பதோடு,சீரான குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
#அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எந்த பகுதியிலும் டாஸ்மாக் கடைகளை அமைக்க கூடாது என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வதோடு, கள்ளத்தனமாக சட்டவிதிமுறைகளை மீறி மறைமுக விற்பனை செய்து வரும் நபர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மீண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் பட்சத்தில் மக்களை திரட்டி ஜனநாயக வழியில் அறப் போராட்டங்களை டாஸ்மாக் இல்லாத பகுதியாக மாற்றும் வரை நடத்துவோம் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
#கல்லிடைக்குறிச்சி வாய்க்கால் பாலம் கடையோரப் பகுதிகளில் தடுப்புசுவர் இல்லாமல் ஆபத்து ஏற்படும் சூழல் இருந்து வருகின்றது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற் கொள்ள இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
#பாபநாசம் முதல் திருநெல்வேலி, திருநெல்வேலி முதல் பாபநாசம் வழி செல்லக்கூடிய பேருந்துகளின் சேவை இரவு நேரங்களில் இல்லாமல் இருப்பது மக்களை அவதிக்குள்ளாக்குகிறது.
மக்களின் தேவையறிந்து பேருந்து சேவைகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட துறையினை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
இக்கூட்டம் இறுதியாக தொகுதி பொருளாளர் வழக்கறிஞர் முஹம்மது ஷfபி நன்றி கூறினார்
இப்படிக்கு
பீர்மஸ்தான்
அம்பை தொகுதி தலைவர்
SDPI கட்சி நெல்லை கிழக்கு மாவட்டம்
9688644688
No comments:
Post a Comment