Thursday, May 4, 2017

அஸ்ஸாமில் பசுக்களை திருடியதாக சந்தேகித்து இரண்டு முஸ்லிம்கள் கொலை

By Wafiq Sha onMay 3, 2017

அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த அபூ ஹனிஃபா மற்றும் ரியாசுதீன் அலி ஆகியோர் பசுவை திருடினார்கள் என்ற சந்தேகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

அகலாக் கொலையில் தொடங்கி தொடர்கதையாகி வரும் பசுக்கொலைகளின் பட்டியலில் இந்த கொலையும் இணைந்துள்ளது.

இதுதொடர்பாக நாகோன் மாவட்ட காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து நாகோன் பகுதி காவல்துறை ஆய்வாளார் தேப்ராஜ் உபாத்யாய் கூறுகையில், “அந்த இருவரும் மாடுகளை திருட வந்தார்கள் என்று கூறி அந்த கிராம மக்களால் விரட்டப்பட்டு கட்டைகளால் தாக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அவர்களை இரவு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது அவர்கள் உயிரிழந்துவிட்டனர்.” அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சி ஒன்று வட்டார தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் அந்த இருவரின் கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவர்களை அந்த கிராம மக்கள் தாக்குவது பதிவாகியுள்ளது.

அகலாக், பெஹ்லு கான் வரிசையில் அபூ ஹனிஃபா மற்றும் ரியாசுதீனும் தற்போது சேர்ந்துள்ளனர். இந்த அனைத்து வன்முறைகளிலும் காவல்துறை வெறும் பார்வையாளர்களாகவும் அல்லது இந்த வன்முறைகளை உரிய நேரத்தில் தடுக்காதவர்களாகவும் இருந்துள்ளது.

ராஜஸ்தான் ஆழ்வார் தாக்குதலிலும் கூட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற 11 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை நாட்டில் சுமார்  பத்து பசுக்கொலைகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/puthiyavidial/

No comments:

Post a Comment