Saturday, October 31, 2015

கோவன் கைது பாப்புலர் பிரண்ட் கண்டனம்

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ம.க.இ.க வின் வீதி நாடக கலைஞர் கோவன் கைது செய்திருப்பதை கருத்துரிமையை முடக்கும் ஜனநாயக விரோத செயல் என்றும் அவரை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தனது கண்டனத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம். முகம்மது இஸ்மாயீல் பதிய வைத்தார். அவர் தனது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழக அரசின் மக்கள் விரோத கொள்கையான மதுவினால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும் பாடல்கள் மூலமாக மக்கள் மன்றத்தில் பிரச்சாரம் செய்து வந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகரும், வீதி நாடக கலைஞருமான கோவன் நேற்று திருச்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது கருத்துரிமையை முடக்கும் செயலாகும்.
தமிழகத்தில் ஜனநாயக அடிப்படையில் நடக்கும் அறப்போராட்டங்கள் காவல்துறையினரால் சட்ட விரோதமாக ஒடுக்கப்படுவது தொடர் கதையாகி வரும் சூழ்நிலையில், சுதந்திரமாக தனது கருத்தை பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியதற்காக கோவன் அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.
இத்தகைய ஜனநாயக விரோத செயலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாமாக கண்டிப்பதோடு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கோவன் அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், இது போன்ற ஜனநாயக விரோத போக்கை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
 
இப்படிக்கு

எம். அப்துல் ரஜாக்,
மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.    http://popularfronttn.org/news.php?id=5297&newstype=1

SDPI போராட்ட எதிரொலி நேதாஜி சாலை வேலையை துவங்கியது மாநகராட்சி

SDPI போராட்ட எதிரொலி மேலப்பாளையம் நேதாஜி சாலையில் வேலையை துவங்கியது மாநகராட்சி

Thursday, October 29, 2015

நெல்லை SDPI கட்சி நாத்து நடும் போராட்டம்

நெல்லை SDPI கட்சி நடத்திய நாத்து நடும் போராட்டம்

29.10.2015

மேலப்பாளையம் முழுதும் பிரதான சாலைகள் குண்டு குழியுமாக விபத்துகளை ஏற்படுத்தும் விதமாகவும்
தற்போது மழை பெய்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது

பொதுமக்கள் ,வியாபாரிகள் ,பள்ளி. கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமங்கள் படுகிறார்கள்

பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை

சந்தை செல்லும் நேதாஜி சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது

இதை சரி செய்ய புதிய தரமான  தார் சாலை அமைக்க கோரி SDPI கட்சி  சார்பாக சாலையில் நாத்து நடும் போராட்டம் நடைபெற்றது

https://m.facebook.com/sdpitnvl/

Friday, October 23, 2015

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் இன்று கடைசி நாள்

��முக்கிய அறிவிப்பு :��

�� வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று ( 24/10/2015 ) கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

��நேற்றுடன் நேரில் போய் பதிவு செய்யும் வாய்ப்பு முடிந்தது.

��இன்று அரசு விடுமுறை என்கின்ற காரணத்தினால் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

��இணையதளத்தில் இன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

�� elections.tn.gov.in/eregistration

��வாக்காளர்கள் பட்டியல் ஜனவரி மாதம் வெளியாகிறது.

��அனைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல அதிகமாக பகிரவும்...

��‍��‍��‍�
SDPI

சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா தமிழ் நாடு ியா�( SDPI ) ி

மேலப்பாளையம் மர்ம காச்சலால் உயிர் இழந்த நாசர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் SDPI கட்சி பாளை தொகுதி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

மேலப்பாளையம் மர்ம காச்சலால் உயிர் இழந்த நாசர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் SDPI கட்சி பாளை தொகுதி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

23.10.2015

SDPI கட்சி பாளை தொகுதி செயற்குழு கூட்டம் தொகுதி தலைவர் சேக் தாவுத் தலைமையில் நடைபெற்றது

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீது உஸ்மானி மற்றும் பொது செயலாளர் இலியாஸ் கலந்து கொண்டனர்

தொகுதி துணைத்தலைவர் ஜாபர் ,செயலாளர் மின்னத்துல்லாஹ் ,இணைச்செயலாளர் ஜெபா ,செயற்குழு உறுப்பினர் கள் சலீம் ,ஹைதர் அலி பகுதி தலைவர் பஷீர் ,செயலாளர் மீரான் ,இணைச்செயலாளர் சுல்தான் பாதுஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்

1 , சில தினங்களுக்கு முன் மர்ம காச்சலால் உயிர் இழந்த மேலப்பாளையம் சப்பானி ஆலிம் கீழத்தெருவை சார்ந்த நாசர் அவர்களின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்  

2, மேலப்பாளையம் மண்டலம் முழுவதும் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகேட்டை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் போர்கால முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

3, குண்டும் குழியுமாக உள்ள பிரதான சாலைகளை சரி செய்து தரமான தார்சாலைகள் அமைக்க பட வேண்டும்

4, மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகே அரசு விதிக்கு உட்பட்டு 100மீட்டர் இடைவெளியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும்

5, மேலப்பாளையம் பகுதி முழுதும் உள்ள கழிவு நீர் ஓடைகள் தூர்வாரி மாநகராட்சி விதிகளில் உள்ளபடி அனைத்து கழிவு நீர் ஓடைகளுக்கும் மூடி இட படவேண்டும்

6, மேலப்பாளையம் அம்பை சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக உள்ள மின்கம்பங்களை நகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும்

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

https://m.facebook.com/sdpitnvl

Thursday, October 22, 2015

இரண்டு தலித் குழந்தைகள் படுகொலை SDPI டெல்லியில் ஆர்ப்பாட்டம்

ஹரியானாவில்  இரண்டு தலித்  குழந்தைகள் படுகொலை கண்டித்து SDPI கட்சி  டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்

https://m.facebook.com/SDPIpage

Wednesday, October 21, 2015

இரண்டு தலித் குழந்தைகள் எரித்து படுகொலை

ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் தலித் குடும்பத்தினர் மீது உயர் வகுப்பினர் கும்பல் தீ வைத்த சம்பவத்தில் 2 குழந்தைகள் பலியாகினர்; இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பல்லப்கர் போலீஸ் உதவி ஆணையர் புபீந்தர் சிங் கூறும்போது, “பரிதாப்பாத்தில் உள்ளது சம்பெட் கிராமம். இங்கு வசிக்கும் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்தே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதிகாலை 3 மணியளவில், வீட்டினுள் 4 பேர் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அவர்கள் படுத்திருந்த கட்டிலுடன் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் 2 வயது குழந்தை ஒன்றும், 10 மாத குழந்தை ஒன்றும் பரிதாபமாக எரிந்து கருகின. அக்குழந்தைகளின் பெற்றோர் தீக்காயங்களுடன் டெல்லி சாப்டர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்றார்.

பரிதாபாத் போலீஸ் ஆணையார் சுபாஷ் யாதவ் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தலித் குடும்பம் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சன்பெட் கிராமத்தில் காலங்காலமாக ஆதிக்க சமூகத்தினருக்கும் தலித் சமூகத்தினருக்கும் இடையே மோதல் நிலவி வருவதாகவும், கடந்த ஆண்டு இரண்டு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பழி தீர்க்கும் வகையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மக்களை சந்திப்போம் SDPI பிரச்சார பயணம்

மக்களை சந்திப்போம்

மாபெரும் பிரச்சார பயணம்
கன்னியாகுமரி முதல் சென்னை வரை

நவம்பர் 28 முதல் டிசம்பர் 13

கோரிக்கைகள்

‪#‎பூரண_மதுவிலக்கு

‪#‎முஸ்லிம்களுக்கு_7சதவீத_இட_ஒதுக்கீடு‬

‪#‎நீர்_ஆதாரங்கள்_பாதுகாப்பு

‪#‎கட்சத்தீவு_மீட்பு

‪#‎மத்திய_அரசின்_மக்கள்_விரோதப்போக்கு‬,

ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை "மக்களை சந்திப்போம்"என்ற பிரச்சாரத்தின் மூலம் உங்களை சந்திக்க வருகிறார்

SDPI கட்சியின் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாகவி அவர்கள்.
விடியலை நோக்கிய பிரச்சார பயணம் வெற்றி அடைய உழைப்போம்

/////////////////////////

SDPI starts its journey to insist the five important features from the foot of India(Kanyakumari)..
Features:

‪#‎Free‬ state from alcohol

#7% of Reservation for muslim

# preservation of water resources

‪#‎recovering‬ katcha theevu

‪#‎central‬ govt's violence against people..

The journey entitled
"MAKKALAI SANDHIPOM" starts from NOV 28 and ends on DEC 13
KKSM Dhehlan Bagavi, the state leader of SDPI is coming to meet the people...

Monday, October 19, 2015

BJP ,RSS -சை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆர்ப்பாட்டம்

நெல்லை பாப்புலர் பிரண்ட் ஆர்ப்பாட்டம் 200 மேற்பட்டோர் கைது

16.10.2015

நெல்லை மேலப்பாளையத்தில் பாப்புலர் பிரண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் மாட்டுகறி உண்ணும் போராட்டமும்  நடைபெற்றது

மத்தியில் ஆளும் மதவாத பா.ஜ.க அரசின் காட்டுமிராண்டி தனத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முதல் அனுமதி அளித்த கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

மண்டபத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது

மாநில பொது செயலாளர் காலித் முகம்மது

மற்றும் மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் தோழர் பிரிட்டோ ஆகியோர் கண்டன உரையாற்றினர்

தர்ணா போராட்டம் ராமநாதபுரத்தில்

தர்ணா போராட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக
காவல்துறை கண்டித்து இராமநாதபுரத்தில் மாபெரும் தர்ணா போராட்டம் வருகி்ன்ற 21 தேதி அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ளது அனைவரும் கலத்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்

Sunday, October 18, 2015

டெங்கு விழிப்புணர்வு மற்றும் உடற்பயிற்சி அவசியம்

மேலப்பாளையத்தில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு முகாம்

18.10.2015

ஆரோக்கியமான மக்கள்

வலிமையான தேசம்

பாப்புலர் பிரண்ட் சார்பாக
மேலப்பாளையத்தில் நடைபெற்ற  விழிப்புணர்வு முகாமில்

Dr துரைசிங் (தோல் நோய் நிபுணர் மற்றும் Mr Nellai சாம்பியன் )

உடற்பயிற்சியின் அவசியம் ஆரோக்கியமாக வாழ வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்

மேலப்பாளையம் சுகாதார ஆய்வாளர் ஷாகுல் ஹமீது அவர்கள்

டெங்கு கொசு  எப்படி உற்பத்தி ஆகிறது

டெங்குவை தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன வென்று விளக்கம் அளித்தார்

நிகழ்ச்சி கலந்து கொண்ட மக்கள் பயன்பெற்றனர்

பாப்புலர் பிரண்ட் மாவட்ட செயலாளர் இத்ரீஸ் பாதுஷா நகர தலைவர் இசாக் செயலாளர் ராசிக் பைஜி
மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Sunday, October 11, 2015

SDPI இலவச மருத்துவ முகாம்

நெல்லை மேலப்பாளையம்

SDPI கட்சி சார்பாக இலவச  மருத்துவ முகாம்

11.10.2015

SDPI கட்சி பசுமை  மேலப்பாளையம் திட்டத்தின் ஒரு பகுதியாக வாரம் விட்டு வாரம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது

இன்றைய முகாமில் மூட்டு வலி எலும்பு  சம்பந்தமான பிரச்சினைகள் ,மகப்பேறு மகளிர் நோய் சம்பந்தமான பிரச்சினைகள்  அனைத்திற்கும் மருத்துவ ஆலோசனைகளும்  மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது

பெருமாள் புரம் சக்தி மருத்துவ மனை  டாக்டர் வெங்கடேஷ் பாபு M.B.B.S, MS, ORTHO ,FRCS (England )மற்றும் DR .சுமதி M.B.B.S ,DGO (London ) ஆகியோர் சிறப்பு சிகிச்சை அளித்தனர்

சிறப்பம்சமாக எலும்பின் வலிமை அறிதல் சோதனையும் இலவசமாக பார்க்கப்பட்டது

இம்முகாமில் 150 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

சிறப்பு அழைப்பாளராக மேலப்பாளையம் சுகாதார ஆய்வாளர் ஷாகுல் ஹமீது அவர்கள் முகாமை துவங்கி வைத்தார்கள்

புதுமனை கொத்பா பள்ளி வாசல் தலைவர் நெய்னா முகம்மது

SDPI கட்சி மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஹயாத் முகம்மது ,மஜித் பாளை தொகுதி செயலாளர் மின்னத்துல்லாஹ் ,இணை செயலாளர் ஜெபா செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் பகுதி தலைவர் பஷீர் ,செயலாளர் மீரான் ,இணைச்செயலாளர் சுல்தான் பாதுஷா ,சுந்தர் ராஜன் ,மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் கலந்துகொண்டனர்

முகாம் நிறைவில் மருத்துவ குழு தலைவர் முகம்மது லெப்பை நன்றி கூறினார்

https://m.facebook.com/profile.php?id=961871540494053

Saturday, October 10, 2015

மேலப்பாளையம் மர்ம காச்சலால் வாலிபர் மரணம்

மேலப்பாளையம் மர்ம காச்சலால் இறந்த நாசர்

குடும்பத்திற்கு
இழப்பீடு வழங்க SDPI கோரிக்கை

அவரது இழப்பால் வாடும்
மூன்று குழந்தைகள் மற்றும்  குடும்பத்திற்கு அரசு 10 லட்சம் ரூபாய்

முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து
இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Friday, October 9, 2015

மாட்டிறைச்சி ,புழல் சிறை விவகாரம் SDPI சென்னையில் ஆர்ப்பாட்டம்

மாட்டிறைச்சி, புழல் சிறை விவகாரம் SDPI கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்

09.10.2015 சென்னை

மாட்டிறைச்சி உண்டதாக ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்தும்!
புழல் சிறையில் போலீசார், கைதிகள் மோதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோரியும்!
எஸ்.டி.பி.ஐ சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

> உத்திர பிரதேசத்தில் மாட்டிறைச்சி உண்டதாக கூறி ஒரு முஸ்லீமை அடித்துக் கொன்ற கண்டித்தும்.
> அதிகரிக்கும் மதவெறி செயல்களை கட்டுப்படுத்துக்கோரியும்!
> புழல் சிறை கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும்!

எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, வடசென்னை மாவட்ட தலைவர் ஏ.கே.கரீம், தென்சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய மாநில தலைவர் தெகலான் பாகவி பேசியதாவது : பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றது முதல், நாடு முழுவதும் மதவெறியும், வகுப்பு வாதமும் தலைவிரித்தாடுகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாநில தேர்தல் நடைபெறும் போதும், வெறுப்பு பிரச்சாரம் அதிகரிக்கப்படுகிறது. இப்போது பீகாரில் நடைபெறும் தேர்தலை மனதில் கொண்டு பாஜகவால் வெறுப்பு பிரச்சாரம் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

பீகாரில் இருக்கும் யாதவர்களின் வாக்குகளை கவர்வதற்காகவே இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யார் என்ன உணவு உண்ண வேண்டும் என்பது அவர்களுடைய தனி உரிமை. அதை முடிவு செய்வதற்கு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என்பதற்கு இந்து மதத்தில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இந்த மாட்டிறைச்சி விவகாரத்தால் மாடுகள் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பாஜக அரசே காரணம். இத்தைகய நடவடிக்கைகள் மூலம் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. மோடி அரசின் இத்தகைய வெறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால், சிறுபான்மை மக்களோடு இந்துக்களும் சேர்ந்து மோடி அரசுக்கு பாடம் புகட்டுவார்கள்.

கடந்த 25 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் நடைபெற்ற கைதிகளுக்கும், காவலர்களுக்கும் இடையேயான மோதல் வருந்ததக்கது, கண்டிக்கத்தக்கது. இந்த மோதலுக்கு சிறை அதிகாரி இளவரசன் என்பவரே காரணம். ஆனால் இந்த மோதலுக்கு முஸ்லிம் சிறைக் கைதிகளை காரணமாக காட்டுவது கண்டிக்கத்தக்கது. இந்த அதிகாரி இளவரசன் மீது ஏற்கனவே நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உயர் அதிகாரிகள் துணை போவதே இத்தகைய பிரச்சனைக்கு காரணம். இந்த பிரச்சனை காரணமாக சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றப்பட்ட முஸ்லிம் சிறைக்கைதிகள் அந்தந்த சிறைகளில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை. 3 மாத காலம் அவர்களின் குடும்பத்தினர் சந்திப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். குடும்பத்தினரை கைதிகள் பார்ப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். கைதிகளை தாக்கிய சிறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மோதலின் பின்னணியை கண்டறியவும், மேற்கொண்டு இது போல் மோதல் நடைபெறாமல் இருக்கவும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

https://m.facebook.com/sdpitamilnadu

Thursday, October 8, 2015

சவுதி ;பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய ISF


சவுதி அரேபியா வில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி

இந்தியன் சோசியல் ஃப்போரம் (ISF).. .......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குடும்ப சூழ்நிலை காரணமாக சவூதி அரேபியா தலைநகர்
ரியாத்திற்கு வீட்டு வேலை செய்து பொருளாதாரத்தை தேடிக்கொள்ளும் நோக்கத்தோடு வந்த வட ஆற்காடு மாவட்டம், காட்பாடி அருகே வெண்ணம்பள்ளி என்னும் ஊரை சேர்ந்த முனி ரத்தினம் என்பவரின் மனைவி கஸ்தூரி எனும் பெண்மணி, தான் வேலை செய்யும் இடத்தில் பல்வேறு துன்புறுத்தல்களை சந்தித்துள்ளார். அங்கிருந்து தப்பித்து செல்லும் முயற்சியில் ஈடுபட்ட அவர் ஜன்னலில் துணியை கட்டி குதிக்கும்போது தன்னுடைய முதலாளியால் கை வெட்டப்பட்டதாகவும்; உயரத்திலிருந்து கீழே குதித்ததால் கால் மற்றும் முதுகில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறினார் . இந்த விஷயம் இந்தியன் சோசியல் போரம் ரியாத் - தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் நிர்வாகிகளின் கவனத்திற்கு வந்தது.உடனே களத்தில் இறங்கிய இந்தியன் சோசியல் போரம் தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் பொதுச்செயலாளர் இஞ்சினியர் ரஷீத் கான், செயலாளர் சர்தார், மாவட்ட தலைவர் ராஜ் முஹம்மத் ஆகியோர் கிங்டம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கஸ்தூரி அவர்களையும் மருத்துவமனை நிர்வாகிகளையும் சந்தித்து விபரங்களை கேட்டறிந்தனர். உடனடியாக இந்திய தூதரக நிர்வாகிகளை சந்தித்து இந்த விசயத்தில் சட்ட ரீதியான பிரச்சினைகள் இருப்பதால் உயர் அதிகாரிகள் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதியை பெற்று தரும்படியும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும்படியும் வற்புறுத்தினர். அதை ஏற்றுக்கொண்ட இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் திரு .அணில் அவர்கள் இந்தியன் சோசியல் போரம் நிர்வாகிகளோடு இணைந்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
இது போன்று பல்வேறு சமூக நலப்பணிகளை செய்துவரும் இந்தியன் சோசியல் போரத்தின் பணிகள் பாதிக்கப்பட்ட கஸ்தூரி அவர்களுக்கும் நீதியை பெற்று தரும் என்பதில் சந்தேகம் இல்லை.   https://m.facebook.com/sdpitnvl