Friday, October 9, 2015

மாட்டிறைச்சி ,புழல் சிறை விவகாரம் SDPI சென்னையில் ஆர்ப்பாட்டம்

மாட்டிறைச்சி, புழல் சிறை விவகாரம் SDPI கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்

09.10.2015 சென்னை

மாட்டிறைச்சி உண்டதாக ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்தும்!
புழல் சிறையில் போலீசார், கைதிகள் மோதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோரியும்!
எஸ்.டி.பி.ஐ சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

> உத்திர பிரதேசத்தில் மாட்டிறைச்சி உண்டதாக கூறி ஒரு முஸ்லீமை அடித்துக் கொன்ற கண்டித்தும்.
> அதிகரிக்கும் மதவெறி செயல்களை கட்டுப்படுத்துக்கோரியும்!
> புழல் சிறை கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும்!

எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, வடசென்னை மாவட்ட தலைவர் ஏ.கே.கரீம், தென்சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய மாநில தலைவர் தெகலான் பாகவி பேசியதாவது : பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றது முதல், நாடு முழுவதும் மதவெறியும், வகுப்பு வாதமும் தலைவிரித்தாடுகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாநில தேர்தல் நடைபெறும் போதும், வெறுப்பு பிரச்சாரம் அதிகரிக்கப்படுகிறது. இப்போது பீகாரில் நடைபெறும் தேர்தலை மனதில் கொண்டு பாஜகவால் வெறுப்பு பிரச்சாரம் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

பீகாரில் இருக்கும் யாதவர்களின் வாக்குகளை கவர்வதற்காகவே இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யார் என்ன உணவு உண்ண வேண்டும் என்பது அவர்களுடைய தனி உரிமை. அதை முடிவு செய்வதற்கு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என்பதற்கு இந்து மதத்தில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இந்த மாட்டிறைச்சி விவகாரத்தால் மாடுகள் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பாஜக அரசே காரணம். இத்தைகய நடவடிக்கைகள் மூலம் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. மோடி அரசின் இத்தகைய வெறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால், சிறுபான்மை மக்களோடு இந்துக்களும் சேர்ந்து மோடி அரசுக்கு பாடம் புகட்டுவார்கள்.

கடந்த 25 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் நடைபெற்ற கைதிகளுக்கும், காவலர்களுக்கும் இடையேயான மோதல் வருந்ததக்கது, கண்டிக்கத்தக்கது. இந்த மோதலுக்கு சிறை அதிகாரி இளவரசன் என்பவரே காரணம். ஆனால் இந்த மோதலுக்கு முஸ்லிம் சிறைக் கைதிகளை காரணமாக காட்டுவது கண்டிக்கத்தக்கது. இந்த அதிகாரி இளவரசன் மீது ஏற்கனவே நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உயர் அதிகாரிகள் துணை போவதே இத்தகைய பிரச்சனைக்கு காரணம். இந்த பிரச்சனை காரணமாக சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றப்பட்ட முஸ்லிம் சிறைக்கைதிகள் அந்தந்த சிறைகளில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை. 3 மாத காலம் அவர்களின் குடும்பத்தினர் சந்திப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். குடும்பத்தினரை கைதிகள் பார்ப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். கைதிகளை தாக்கிய சிறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மோதலின் பின்னணியை கண்டறியவும், மேற்கொண்டு இது போல் மோதல் நடைபெறாமல் இருக்கவும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

https://m.facebook.com/sdpitamilnadu

No comments:

Post a Comment