மேலப்பாளையம் மர்ம காச்சலால் உயிர் இழந்த நாசர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் SDPI கட்சி பாளை தொகுதி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
23.10.2015
SDPI கட்சி பாளை தொகுதி செயற்குழு கூட்டம் தொகுதி தலைவர் சேக் தாவுத் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீது உஸ்மானி மற்றும் பொது செயலாளர் இலியாஸ் கலந்து கொண்டனர்
தொகுதி துணைத்தலைவர் ஜாபர் ,செயலாளர் மின்னத்துல்லாஹ் ,இணைச்செயலாளர் ஜெபா ,செயற்குழு உறுப்பினர் கள் சலீம் ,ஹைதர் அலி பகுதி தலைவர் பஷீர் ,செயலாளர் மீரான் ,இணைச்செயலாளர் சுல்தான் பாதுஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்
1 , சில தினங்களுக்கு முன் மர்ம காச்சலால் உயிர் இழந்த மேலப்பாளையம் சப்பானி ஆலிம் கீழத்தெருவை சார்ந்த நாசர் அவர்களின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
2, மேலப்பாளையம் மண்டலம் முழுவதும் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகேட்டை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் போர்கால முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
3, குண்டும் குழியுமாக உள்ள பிரதான சாலைகளை சரி செய்து தரமான தார்சாலைகள் அமைக்க பட வேண்டும்
4, மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகே அரசு விதிக்கு உட்பட்டு 100மீட்டர் இடைவெளியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும்
5, மேலப்பாளையம் பகுதி முழுதும் உள்ள கழிவு நீர் ஓடைகள் தூர்வாரி மாநகராட்சி விதிகளில் உள்ளபடி அனைத்து கழிவு நீர் ஓடைகளுக்கும் மூடி இட படவேண்டும்
6, மேலப்பாளையம் அம்பை சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக உள்ள மின்கம்பங்களை நகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும்
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
https://m.facebook.com/sdpitnvl
No comments:
Post a Comment