Friday, October 2, 2015

டெல்லி SDPI போராட்டம்

உ.பி. தாத்ரி சம்பவம்! - முலாயம்சிங் வீட்டை முற்றுகையிட்டு SDPI போராட்டம்!
*********************************************
டெல்லியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பிசோதா கிராமம், உபி மாநிலம் தாத்ரி தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த பக்ரீத் பண்டிகைக்காக பசு மாடு பலி கொடுத்து அதன் இறைச்சியை உண்டதாக கிளம்பிய வதந்தியில், கடந்த திங்கள் கிழமை 52 வயது இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தினரும் அப்பகுதி கிராமத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இந்த வதந்தியை அறிமுகம் இல்லாத மூன்று இந்துத்துவா குண்டர்கள் அப்பகுதி சிவன் கோயிலின் ஒலிபெருக்கியில் அறிவிக்கும்படி பூசாரி பலவந்தப்படுத்தியதாகவும், அந்த அறிவிப்பை தொடர்ந்தே தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
உ.பியில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற இந்துத்துவா குண்டர்களின் தொடர் அக்கிரம செயலை தடுக்கத் தவறிய அகிலேஷ் யாதவை கண்டித்தும், ஆளும் கட்சியின் தலைவரான முலாயம்சிங் யாதவை கண்டித்தும், தாக்குதல் நடத்திய இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டெல்லியில் உள்ள முலாயம் சிங் வீட்டை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சி போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் பல்வேறு சமூல நல ஆர்வலர்களும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

https://m.facebook.com/sdpitamilnadu

No comments:

Post a Comment