பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக கூட்டம் கடந்த அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்றது.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கக்கூடிய ஜனநாயக உரிமைகளான விரும்பியதை பேசுவது மற்றும் விரும்பிய உணவுகளை உண்ணுவது உள்ளிட்டவற்றை பாதுகாப்பதற்கான தேசிய அளவிலான பிரச்சாரத்திற்கான அறிவிப்பை வெளியிட்டனர்.
நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் முழுக்க முழுக்க மக்கள் நலனுக்கு எதிரானதாக, கார்ப்பரேட் மற்றும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களுக்கு மட்டுமே ஆதரவானதாக உள்ளதையடுத்து பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவரிகளின் கூட்டத்தில் இப்பிரச்சாரத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது வாக்குறுதியளித்த 100 நாட்களில் கருப்பு பணத்தை மீட்டெடுப்பது, ஊழலில்லா அரசாங்கம் போன்றவை அனைத்துமே வெற்று அறிக்கைகள் தான் என்பதை தற்போது மக்கள் உணர தொடங்கிவிட்டனர்.
பொது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சேவை துறைகளில் ஆளும் பாஜக அரசாங்கத்தின் பண முதலைகளுக்கு ஆதரவான நிலைபாடு நாட்டின் அடித்தட்டு மக்களை பெரிதும் பாதித்துள்ளது. உலக நாடுகளை சுற்றிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியின் பிரசித்திப்பெற்ற கோஷமான "மேக் இன் இந்தியா" எவ்வித பொருளாதார வளர்ச்சியையும் இந்தியாவிற்கு கொண்டுவரவில்லை. மிக விரைவில் மத்திய என்.டி.ஏ அரசின் முதலாளித்துவத்திற்கு ஆதரவான கொள்கையால் மிகப்பெரிய விலையை இந்திய மக்கள் கொடுக்கவேண்டியிருக்கும்.
ஆளும் அரசாங்கத்தில் சங்பரிவாரங்களின் இடையூருகள் அதிக அளவில் இருப்பதையும் இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது. மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும், மிக முக்கிய அதிகாரவர்க்கத்தினரும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கிய தலைவர்களை சந்திப்பதற்கு வரிசையில் நிற்கின்றனர். இதற்கான ஆதராங்களும் உள்ளன. இவை தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் மதச்சார்பற்ற மக்களிடையே அச்சத்தையும், அச்சுறுத்துதலையும் உருவாக்கியுள்ளது.
வாகுப்புவாதத்திற்கு விலை கொடுக்கும் அப்பாவி மக்கள்:
புதிய அரசு ஆட்சிபொருப்பேற்ற நாள் முதல் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வார்த்தை மற்றும் உடல் ரீதியாக அதிகரித்து வரும் தாக்குதலுக்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது. முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்ற கற்பனைக்கு எதிராக நடத்தப்படும் வெறியூட்டும் தீவிர வகுப்புவாத பிரச்சாரத்திற்கு அப்பாவி முஸ்லிம்கள் விலை கொடுக்கின்றனர். தேசிய தலைநகருக்கு அருகாமையில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக குற்றம்சாட்டி முதியோர் ஒருவரை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சமீபத்திய சம்பவம் இதுவரையிலும் நாம் கேள்விப்பட்டிராத அளவுக்கு மிருகத்தனமாக அப்பாவி முஸ்லிம் மீது தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு தாக்குதல்களையும் தொடுக்க சங்பரிவாரங்கள் துணிவிட்டனர் என்பதை காட்டுகிறது.
இந்துத்துவா அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கின்றவர்கள் திட்டமிட்டு ஒழித்துக்கட்டப்படுகின்றனர். கர்நாடகா மாநில சுதந்திர சிந்தனையாளரான எம்.எம்.கல்பர்கியின் படுகொலை இந்துத்துவா எதிர்ப்பு சிந்தனையாளர்களை நிரந்தரமாக அடக்குவதின் சமீபத்திய சம்பவமாக உள்ளது.
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உயர்சாதியினர்:
சமீபத்திய குஜராத் உயர்சாதியினரான பட்டேல் சமூகத்தின் இடஒத்துக்கீடு போராட்டம் பிந்தங்கிய வகுப்பினரை வலிமைப்படுத்துவதற்கான நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு கொள்கையை முற்றுலும் ஒழிப்பதற்கான ஒரு தெளிவான தந்திரமே என்பதை இக்கூட்டம் கவனித்துள்ளது. இந்த போராட்டக்குழு தலைவர் தீவிர வகுப்புவாத தலைவர்களிடமிருந்து உத்வேகத்தையும் ஊக்குவிப்பையும் பெற்றுவருகிறார் என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். பூனை பையை விட்டு வெளியே வந்துவிட்டது, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடு கொள்கையை மறுஆய்வு செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நீதி மற்றும் சமத்துவம் அடைய சிறு வழிமுறையாக இருக்கும் இடஒதுக்க்கீடு விஷயத்தில் கொள்கை ரீதியான முடிவை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொண்டது.
ஜனநாயகத்தை பாதுகாக்க கைகோர்ப்போம்:
சுதந்திரமாக உண்ண உரிமை மற்றும் சுந்திரமாக சிந்திக்க உரிமை ஆகியவற்றுக்கு ஆதரவாக எழுந்து நிற்பதன் மூலம் ஜனநாயகத்தை பாதுகாக்க மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைப்புவிடுத்துள்ளது. இந்த இலக்கை அடைய "உணவு உண்ண உரிமை, பேசுவதற்கு உரிமை" என்ற கோஷங்கள் முழங்க தேசிய அளவிலான பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற அக்டோபர் 9 முதல் 18 வரை மேற்கொள்ள உள்ளது. இப்பிரச்சாரம் வெற்றி பெற சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தங்களது ஆதரவை நல்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர்களின் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவண்:
முஹம்மது அலி ஜின்னா
தேசிய பொதுச் செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
https://m.facebook.com/popularfronttamilnadu
No comments:
Post a Comment